Friday, May 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை நீக்க‌ . . .

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் ஜிமெயில் தளத்தில் பயனாளர் களுக் கான வசதி ஒன்று, சிலருக்கு சிக்கலைத் தருவதாக அமைந்து ள்ளது.
 
பொதுவாக மின்னஞ்சல் தளங்களில், புரோ கிரா ம்களில், நாம் யாருக்கே னும் மின்னஞ்சல் அனுப் பினால், அவருக்கு நாம் பின்னாளிலும் அனுப்பு வோம் என்ற அடிப்படை யில், அந்த முகவரி பதிந்து வைக்கப் படுகிறது.
 
அந்த முகவரியில் உள்ள எழுத்துக்களை, அடுத்தமுறை டைப் செய்த வுடன், சார்ந்த முகவரிகள் ஒரு பாப் அப் விண்டோவில் காட்டப்படு கின்றன. முழுமையாக டைப் செய்திடாமல், நாம் குறிப்பிட்ட முக வரியைத் தேர்ந் தெடுத்து, கிளிக் அல்லது என்டர் செய்தால், முகவரி அமைக்கப்படும்.
 
ஒரு நாளில் பலருக்கு அலுவல க ரீதியாக மின்னஞ்சல் அனுப்பு பவர்களுக்கு இந்த வசதி எரிச்ச லூட்டும் உதவியாக உள்ளது.
 
நாம் மீண்டும் அனுப்பும் சந்தர்ப் பம் இல்லாதவர்களின் முகவரி யும் சேவ் செய்யப்பட்டுக் காட்ட ப்படுகிறது. இதனால், நாம் அனு ப்ப விரும்பும் முகவரியினை பாப் அப் விண்டோவில், சற்றுத் தேடிக் கண் டறிய வேண்டியுள்ளது.
 
இவ்வாறு சேவ் செய்து வைத்திடும் வசதியினை நாம் ஜிமெயில் தள த்திலிருந்து எடுத்துவிடலாம்.
 
1. ஜிமெயில் செட்டிங்ஸ் (Gmail settings) செல்லவும்.
 
2. “Settings” திரை காட்டப் படுகையில், “General” என் ற டேப் தேர்ந்தெடுக்கப்பட் டிருக்க வேண்டும். இல்லை எனில் அதனைக் கிளிக் செய் திடவும்.
 
3.இங்கு கீழாகச் சென்று, “Complete contacts for auto-complete” என்று இருப்பதனைக் காணவும். அங்குள்ள “I’ll add contacts my self” என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.
 
தொடர்ந்து “Save Changes” என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.
 
அடுத்த முறை நீங்களாக சேவ் செய்திடாமல், எந்த மின்னஞ்சல் முக வரியும் அதற்கான பட்டியலில் இடம் பெறாது.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: