மன்மதன் வெற்றியை தொடர்ந்து சிம்பு இயக்க இருக்கும், மன்மதன் பார்ட்-2வில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியு ள்ளது. சிம்புவின் திரைக்கதையில், அவ ர் ஹீரோவாக நடித்த படம் மன்தமன். இப் படத்தில் சிம்பு ஜோடியாக ஜோதிகா நடித் து இருந்தார். கடந்த 2004ம் ஆண்டு வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டானது. மன்மதன் படத்தின் இறுதிகாட்சியிலே யே, அதன் 2ம் பாகமாக தொடரும் என்ப தை சிம்பாலிக்காக சொல்லியிருந் தார் சிம்பு. ஒருபக்கம் தன்னுடைய வேட்டை மன்னன், போடா போடி, வாலு படங்களி ல் பிஸியாக இருந்தாலும், மற்றொரு பக் கம் மன் மதன் 2-க்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள் ளார் சிம்பு. இம்முறை படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் டைரக்ஷ்ன்
பொறுப்பையும் அவரே ஏற்றுள் ளார்.
மன்மதன்-2வில் ஜோதிகா ரோலில் யார் நடிப்பார் என்று கோலிவுட்டில் பரவலாக கேள் வி எழுந்த நிலையில், இப்போது அந்தரோலில் அனுஷ்கா நடிப் பார் என்று பரபரப்பாக பேசப்படு கிறது. ஏற்கனவே சிம்புவும்-அனுஷ்காவும் வானம் படத்தில் நடித்து இருந்தனர். அதன் பிறகு இப் போது மீண்டும் இப்படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் சந்தானமும் நடிக்கவுள்ளார்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.