Tuesday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படுக்கையறையில் நித்யானந்தா, ரஞ்சிதா வீடியோ காட்சி உண்மையே! – லெனின் கருப்ப‍ன்

நித்யானந்தாவின் படுக்கையறையில் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருந்த வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளி பரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தி யது. இந்த வீடியோ போலியான து என்றும் மார்பிங் செய்திருக் கிறார்கள் என்றும் நித்யானந்தா மறுத்து வந்தார். மேலும் இதை வைத்து தன்னிடம் சிலர் கோடிக் கணக்கில் பணம் பறிக்க முயன்ற தாகவும் புகார் கூறியிருந்தார்.
 
இதுகுறித்து கர்நாடக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்ற னர். இந்த வீடியோ உண்மையானதா இல்லையா என்பதை அறிய அமெரிக்காவின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
 
இந்த வீடியோவை ஆய்வு செய்த அமெரிக்க தடயவியல் துறை தனது அறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. இந்த வீடியோ ஆதார த்தை நித்யானந்தாவின் முன் னாள் சீடரான லெனின் கருப்பன் ரகசியமாக படம் பிடித்திருந்தா ர். அவர் இந்த அமெரிக்க தடய வியல் துறையின் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட் டார்.
 
இதுகுறித்து அவர் பத்திரிகையா ளர்களிடம் பேசியதாவது;
 
அமெரிக்க தடயவியல் துறையி ன் அறிக்கையின்படி இந்த வீடியோ உண்மையானதுதான். மார்பிங் வேலைகள் எதுவும் செய்யப் படவில்லை. மேலும் அந்த வீடியோ பதிவில் ரஞ்சிதா மட்டும் இல்லை. மேலும் இரண்டு பெண்கள் இரு க்கிறார்கள் என்றும் அதிரடியாக குறிப்பிட்டுள்ளது. இந்த அறிக்கை யை கர்நாடகா சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்க இருக்கிறேன். எனக்கு நித்யானந்தா தரப்பிலிருந்து கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் எதற்கும் நான் அஞ்சமாட்டேன்.  இவ் வாறு அவர் கூறினார்.
( பத்திரிகை ஒன்றில் வெளியானது )

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: