Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறைக்குச் செல்ல‍வும் தயங்கமாட்டேன் – நடிகை குஷ்பு ஆவேசம்

நேற்று இரவு திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு, திருவல்லிக்கே ணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலை மை தாங்கினார். பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. விலை வாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித் து பேசினார். இக்கூட்ட த்தில் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்ட  நடிகை குஷ்பு பேசியதாவது:-

ஏழை எளிய மக்களை பாதிக்கும் வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் பால், பஸ் கட்டணம் மற்றும் பல்வேறு அத்தியா வசிய பொருட்களின் விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து கேள்வி கேட்கும் தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு கள் போடப்பட்டு குண்டர் சட்டங்கள் பாய்கிறது. இந் திய அரசியல்  வரலாற்றில் எத்தனையோ கட்சிகள் மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால், முன்னாள் அமைச்சர்களை, தி.மு.க. வினரை பழி வாங்கும் அரசாங்கமாகவே செயல்படுவது அ.தி.மு. க. மட்டும்தான். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இதைத்தான் செய்தோ மா? என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். தி.மு.க.வினரை பழி வாங்குவதிலேயே நேரத்தை போக்கும் அ.தி.மு.க. மக்களுக்கு ஒன் றும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட் சியில் சட்டம், ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொ லை, கொள்ளை, கடத்தல், செயின் பறிப்பு போன்றவை தினமும் நடந்து வருகிறது. இதை காவல்துறை கண் டு கொள்வதில்லை. தி.மு.க.வினர் மீதே காவல் துறைக்கு கவனம் இரு க்கிறது. ஆட்சியில் நடக்கும் தவறுகளை, அராஜக போக்கை நாங்க ள் தொடர்ந்து தட்டிக் கேட்போம். இதற்காக நான் சிறைக்கு செல்லவு ம் தயங்கமாட்டேன். குண்டர் சட்டம் பாய்ந்தாலும், சிறைகள் வீடு தேடி வந்தாலும் நாங்கள் தட்டிக்கேட்பதை நிறுத்த மாட்டோம். எத்த னை வழக்குகள் போட்டாலும், அடக்கு முறைகளை கையாண்டா லும் தி.மு.க.வை அழிக்க முடி யாது. என்ன முயற்சித்தாலும் எங்கள் ஒற்றுமையை உடைக்க முடியாது. தி.மு.க.வின் பலத்தை வரும் 4-ந் தேதி பாருங்கள். இவ்வாறு நடிகை குஷ்பு கூறினார்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: