Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ராஜசேகர், நித்தியானந்தாவாக மாறியது எப்ப‍டி?

நித்தியானந்தா என்கின்ற ராஜசேகர் 1978ம் ஆண்டு ஜனவரி ஒன் றாம் தேதி திருவண்ணாமலையில் பிற ந்த போது, வானத்தில் எந்த நட்சத்திரமும் தோன்றியதாகச் செய்தியில்லை. எந்த அதிசயச் சம்பவமும் உலகில் நடந்துவிட வில்லை.
 
அவரது குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம். அப்பா கூலித் தொழிலாளி. பிறந்த பத்தாம் நாளில் ராஜசேகருக்கு ஜாதகம் கணிக் கப்பட்டபோது ஜோதிடர், ராஜசேகரின் கிரகசாரங்களைப் பார்த்து அதிசயித்து, பின்னாளில் அவர் ராஜ சன்னியாசியாகத் திகழ்வார் என்று கூறி னாராம்.
 
தனது பன்னிரெண்டாம் வயதில் அருணாச்சல மலை அடிவாரத்தில் ஒரு புத்த பூர்ணிமா அன்று (31 மே 1990), ‘உடல் தாண்டி அனுபவம்’ எனும் பேரானந்த நிலையினை முதல் ஆன்மிக அனுபவமாக இவ ர் அடைந்ததாக அறிவித்தார். பன் னிரெண்டாம் வகுப்புவரை அரசுப் பள்ளியில்தான் படித்த இவர், அத ன்பின் அருணை பொறியியல் கல் லூரியில் சேர்ந்தார். ராம கிருஷ் ண பரமஹம்சர், ரமண மகரிஷி ஆகியோரை மானசீகக் குருவாகக் கொண்டு வளர்ந்த ராஜசேகர், மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்தார். அங்கு சேர்ந்தகொ ஞ்ச காலத்திலேயே, மற்றவர் களை முந்திக் கொண்டு தனக் கு முன்னுரிமை தந்து, ‘தத்கல்’ முறையில் தீட்சை தர வேண் டும் என் று கேட்டிருக்கிறார். ‘அப்ப டி ஒரு வழக்கம் இங்கு இல்லை’ என்று பதில் கிடைக் கவே, அங்கிருந்து வெளியேறி திருச்செங்கோடு, ஈரோடு பகு திகளில் தங்கி  பக்தர்களு க்கு அருளாசி வழங்கி வந்தவர், பின்ன ர் இமயமலைக்குப் புறப்பட் டார். அங்கு பல கடுமையான தவ நிலை க்குப் பிறகு, ‘ஞானஅனுபூதி முக்தி’ என்னும் நிலையினை 2000ம் ஆண்டு ஜனவரி 1 அன்று அடைந்ததா கக் கூறிய இவர், தியான பீடம் என்ற சேவை நிறுவனத் தினை அதே நாளில் ஆரம்பித்தும் வைத்தார். இன்று இந் நிறுவனம் 800 கிளைகளுடன் 21 நாடு களில் கோடிக்கணக்கான சொத்துக்க ளுடன் பரந்து விரிந்துள்ளது (இமய மலையில் உள்ள ஒரு பெரிய சாமி யார் அவருக்கு பரமஹம்ச நித்தியான ந்தா என்று பெயரிட்டதாக தியான பீடத்தின் இணையதளம் கூறுகிற து).
 
நித்தியானந்தா எந்த விஷயத்திலும் ஹைடெக் சமாச்சாரங்களைத் தான்விரும்புவார். மைக் முதல் லேப்டாப் வரை ஹைடெக் சாமியா ராக வலம் வந்த நித்தியானந்தா கார் விஷயத்திலும் ஹைடெக் அம்சங்களைக் கொண்ட ஃபோர்டு எண்டெவர் பிரிமியம் எஸ்யூவி காரை பயன்படுத்தி வருகிறார். ஆண்டுக்கு ஒரு புதிய காரை மாற் றிவிடுவது நித்தியானந்தாவின் வாடிக்கையாம்.
இன்றைய நிலையில் நித்தியானந் தாவின் சொத்து மதிப்பு 2,500கோ டி ரூபாய்க்கு மேல் இருக்கும் என் கிறார்கள். தென் இந்தியாவில் ஆன்மிகச் சொற்பொழிவு, பிரசங்க ம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந் தா, கோடீஸ்வர தொழில் அதிபர் கள், போலீஸ் உயர் அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகளின் நம்பி க்கை நட்சத்திரமானார். தியான பீடத்தில் ஆன்மிகப் பயிற்சியில் சேர விரும்புபவர்களிடம் 2,000 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை நன் கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.
 
நித்தியானந்தா கையைத் தூக்கி ஆசி வழங்க வேண்டும் என்றால் 5,000 ரூபாய் கட்டணம், தலை யைத் தொட்டு ஆசி வழங்க 10 ஆ யிரம் ரூபாய் கட்டணம், தொட்டு அரவணைத்து ஆசி வழங்க 25 ஆயிரம் ரூபாய், பாதபூஜைக்குப் பல்லாயிரம் என வசூல் வேட்டை நடந் துள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவ, மாணவியர் பலர் பொது த்தேர்வில் தேர்ச்சி பெற5,000 முதல் 10 ஆயிரம் வரை பணம் கட்டி ஆசி பெற்றுள்ளனர்.
கிட்டதட்ட 25000 கோடிகளை தனது சொந்த கருவூலத்தில் வைத்தி ருக்கும் நித்தியானந்தா தன்னை துறவி என்று சொல்லிக்கொள்ள தகுதி இருக்கிறதா?
மதுரை ஆதினமாகும் தகுதி தான் இருக்கிறதா?
 
இப்படியெல்லாம் ஜெகஜோதி யாகச் சென்று கொண்டிருந்த நித்தியா னந்தா வாழ்க்கையில் ஒரு வீடியோ படம் மூலம் சறுக் கல் ஆரம்பித்தது. பட்ட காலி லேயே படும் என்பது போல தொ டர்ந்து மதுரை ஆதீன வாரிசானது, பெங்களூரில் செக்ஸ் புகார் வழக்கு, தலைம றைவு, சரண், ஜாமீன் என்றுசர்ச்சைகள் மேல் சர்ச் சை. எதற்கும் அச ராத நித்தியானந்தா தொடர்ந்து தனது ‘ஆன்மிகப் பணிகளில்’[?] இன்னமும் ஈடுபட் டுக் கொண்டுதான் இருக்கிறார். இது அவர்மீதான நம்பிக்கை அல் ல. மக்களின்மடத்தனமான பக்தி மீது அவர் வைத்தி ருக்கும் ‘அபார மான நம்பிக்கை’. இந்த அபார மட நம்பிக்கைதான் இன்னும் இன் னும் புற்றீசல்போல் சாமி யார்கள் இங்கு புறப்பட்டுக் கொ ண்டிருக்க காரணமாயிருக்கிறது.
பிரமானந்தாவுக்குப்பின் ஒரு நித்தியானந்தாவை இந்த மக்களின் பக்தி[?]வெறிதான் உருவாக்கியுள்ளது. இவருடன் போலியானந்தா சாமியார்களின் கதை முடியப்போவதும் இல்லை. இந்த ஆன்ந்தாக் களால் விவேகானந்தர் போன்ற உண்மை வீரத்துறவிகள் பெயர் அல்லவா கெட்டுப்போகிறது.
நன்றி:புதிய தலைமுறை

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: