சென்னையில் தீ விபத்து: 40 குடிசைகள் எரிந்து நாசம்
சென்னை கொருக்குப்பேட்டையில் உள்ள பாரதியார் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சமையல் எரி வாயு சிலிண்டர் திடீரென வெடித் ததால் பெரும் தீ விபத்து ஏற்பட்டு ள்ளது. முதலில் சிலிண்டர் வெடித் த வீடு மட்டும் தீ பிடித்து எரிந்த நிலையில், படிப்ப்படியாக அருகி லிருந்த குடிசைகளுக்கும் தீ மள மளவென பரவியது. சுமார் 40 குடி சைகள் வரை இந்த தீ விபத்தில் எரிந்து நாசமாகியுள்ளன. விபத்து பற்றிய தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். கிட்டத்தட்ட 5 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் மற்ற குடிசைகளுக்கும் தீ பரவாமல் கட்டுக்குள் வைக்த்து, தீயை அணைக்க போராடி வருகின் றனர். தீ விபத்தில் உயிர்ச்சேதம் மற்றும் காயம் அடைந்தவர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் தெரிய வரும் என்று தெரிகிறது