ரஜினியும் கமலும் சேர்ந்து சில படங்களில் நடித்தப் பின்னர் இரு வரும் பிரிந்து தங்களுக்கெ ன்று ஒரு பாணியில் நடித்து வருகிறார்கள். அதுபோல வே நகைச்சுவை நடிகர்கள் விவேக்கும் வடிவேலு வும், பல படங்களில் சேர்ந்து நடித் துள்ளனர். இடையில் பிரிந்து , விவேக் தனியாக தனது தனி பாணியில் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்களு க்கு மூடநம்பிக்கை போக்கும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படு த்தும் வகையிலும் நடித்து வருகிறார். வடிவேல் தனது அங்க அசை வுகளையும், வசன உச்சரிப்பில் ஏற்ற இறக்கங் களை புகுத்தி தனது பாணியில்நடித்து வருகிறார். தற்போது இருவரையும் புதுப்பட மொன்றில் ஒன்றாக நடிக்க வைக்க முயற்சி நடப்பதாக கோடம் பாக்க வட்டாரத்தில் பேச்சு பலமாக அடி படுகிறது.
இதுபற்றி விவேக்கிடம் கேட்டபோது
வடிவேலுடன் நான் சேர்ந்து நடிக்க வைக்கு ம் முயற்சிகள் பற்றி எனது கவனத்துக்கு வர வில்லை. என்னைப் பொறுத்தவரை வடி வேலுடன் சேர்ந்து நடிக்க எப்போதுமே நான் தயாராக இருக்கி றேன். ஆரம்பத்தில் அதிக படங்களில் நாங்கள் இணைந்து நடித்து உள்ளோம். எங்கள் இருவரையும் வைத்து யாரேனும் படம் எடுக்க முன் வந்தால் நான் அதில் நடிப்பதற்கு மகிழ்ச்சியோடு சம்மதிப் பேன் என்று கூறினார்.
இவரது இந்த முடிவுக்கு காரணம் இதுவாக இருக்குமோ
விவேக் இப்படி கூறினாலும், இவரது படங்களில் இடம்பெறும் நகைச்சுவைக்கான ஸ்கிர்ட் எழுதித் தந்தவர் எதிர்பாராத விதமாக இருந்துபோனதால், சமீபத்திய விவேக்கின் நகைச் சுவையில் முன்பு போல் சுவார சியம் இல்லை என்றும், தற் போது இரட்டை அர்த்த வசனங் கள் அதிகளவில் இடம் பெறுவ தாலும், மக்களுக்கு சற்று முக ச்சுளிப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாலும், மேலும் வடிவேலுவுக்கு சமீபத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தாலும், அவர் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தாலும், ஏற்பட்ட பிரச்சனைகளா ல் அவருக்கு வாய்ப்பு கை நழுவிப்போனதாலும், அதோடு இல்லாம ல் இவர்கள் இருவரது வாய்ப்புக்களும் சந்தான நடிகருக்கு சென்று விடுவதாலும், விவேக் இந்த முடிவை மேற்கொண்டதாக ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் கசிந்து கொண்டிருக்கிறது.