Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மற்றவங்க முகம் சுளிக்கும் அளவுக்கு நடிக்க மாட்டேன் – சீரியல் ஸ்ரீஜா.

நேந்திரம் பழம் கணக்காய் கண்ணைப் பறிக்கிற மாதிரி கலராய் இருக்கிறார் ஸ்ரீஜா! விஜய் டி.வி.யில் வெளிவரும் சரவணன் & மீனா ட்சி தொடரின் ஹீரோயின். கோட்டயம்  திருநல்லாறு பொண்ணு. இம்மாதிரி ஒரு மருமகள் கிடைச்சா நல்லா இருக்கும் என்று இன் றைய மாமியார்கள் கேட்கும் அளவிற்கு அனைவரின் நெஞ்ச ங்களிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அழகு ஸ்ரீஜா. மதுரையில் தொடங்கி இன்றை ய முந்தானை முடிச்சு, சரவண ன் மீனாட்சி வரை ஹோம்லியான கேரக்டர்களின் அழகாய் ஸ்கோர் செய்து வருகிறார் ஸ்ரீஜா. சரவணன் மீனாட்சியில் பிஸியாக இருந்த அவரிடம் பிஸியான சீரியல் வாழ்க்கைப் பற்றி கேட்டோம்.

நான் இங்கு டிவி சீரியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவுக்கு வந்துட்டேன். நடிக்கணும், நடனம் ஆடணு ங்கிற ஆர்வத்தில ஸ்கூல்ல மூன்றாவது படிக்கும் போதே கிளாசிகல் டான்ஸ் கத் துக்கிட்டேன். ஐந்தாவது படிச்சிட்டிருந்தப் ப, மலையாள சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. பத்தாம் வகுப்பு படிச்சிட்டிருந் தப்ப மீண்டும் பட வாய்ப்புகள் கிடைச்சது. கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணா, சகோ தரன் சகோதரி, வால் கண்ணாடி படங்களி ல் நடிச்சேன்.

சுவாமி ஐயப்பன் படத்தில நடிச்சிட்டிருந்த ப்ப மதுரை சீரியலுக்கு டைரக்டர் ஜெரால் டு ஹீரோயின் தேடிட்டிருந்திருக்கிறார். அப்ப என் னோட போட்டோவை சுவாமி ஐயப்பன் படத்தயாரிப்பார் கார்த்தி கேயன் டைரக்டர் ஜெரால்டிடம் காட்டியிருக்கிறார். பார்த்த டைர க்டர் இதே மாதிரி பெண்தான் நான் நினைச்சிருக்கிற கேரக்டருக்கு பொறுத்தமாயிருப்பாள்ன்னு சொல் லியிருக்கார். மதுரை சீரியலில், நடிக்க அழைப்பு வந்தது.

சினிமாவை விட சீரியலில் நடிப்பது பிடிச்சிருந்தது. நடிச்சிட்டிருக் கேன். மலையாளத்திலும், தமிழிலும், சினிமா வாய்ப்புகள் வந்தன. அவுங்க கேட்ட தேதிகளில், சீரியல் ஷூட்டிங் இருந்ததால, ஏத்துக்க முடியாம போச்சு. மற்றபடி சினிமாவில் நடிப்பதில், என க்கு ஏதும் பிரச்னையில்லை.

மதுரைதான் என்னோட முதல் சீரியல். அதிலேயே எனக்கு தமிழக மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்போது முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சி ன்னு எனக்கேத்த கதை அமைஞ்சிருக் கு.

ஷூட்டிங் ஸ்பாட்ல, ஷாப்பிங் செல்கிற இடங்கள்ல, என்னை அடை யாளம் கண்டுக்கிட்டு நலம் விசாரிக்கிறாங்க. யூத்கேர்ள்ஸ் சிநேக மா பேசுறாங்க. ரொம்ப சந்தோஷமாயிருக்கு. என்னதான் கதா நாயகியாக அனைவருக்கும் பிடித்தமாதிரி நடித்தாலும் வில்லியாக நடிக்க எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் என் முக மும், தோற்றமும் பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக இருப்பதால் வில்லி கேரக்டர்கள் எனக்குக் கொடுக்க மறுக்கிறார்கள் சின்னதிரை இயக்குநர்கள் என்று வருத்தப்பட்டு சொன்னார் ஸ்ரீஜா.

அதேபோல் நிறைய பேர் கிளாமராக நடிப்பீர்களா என்று கேட்கிறார் கள். எனக்கும் கிளாமருக்கும் செட் ஆகாது. வருவாய் கிடைக்கிறது. புகழ் கிடைக்கிறதே ன்னு மற்றவங்க முகம் சுளிக்கும் அளவுக்கு நடிக்க மாட்டேன். என்னை பார்க்கிறவங்க சிநேகமா மரியா தையா பேசற அளவுக்கு பேசப்படும்ன்னு நான் நினை க்கிற படி கேரக்டர் அமைந்தால் மட்டுமே, நடிப்பேன்.

என்னோட உடல் வாகிற்கு கிளாமர் கேரக்டரெல்லாம் ஒத்து வராது. பணம் கிடைக்கிறது, புகழ் கிடைக்கிறதுன்னு நினைச்சு இஷ்டத்தி ற்கு நடிக்க என்னால் முடியாது. நல்ல கேரக்டராக இருந்தால் நடி ப்பேன். பிடிக்காத கேரக்டரில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக சொன்னார் ஸ்ரீஜா.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: