மாணவன் கண் பார்வை பாதிப்பு தொடர்பாக புரசைவாக்கம் தனி யார் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜ் கூறியதாவது:-
பள்ளிக்கூடம் முடிந்த பின்னர் அனைத்து மாணவர்களையும் வெளி யில் அனுப்புவதற்கான பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பள்ளி வளாகத்தில் வைத்து கார்த்திக் என்ற மாணவ ன் தூக்கிவீசிய பேனா மகேஷ் என்ற மாணவன் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாரா மல் நடந்த இந்த சம்பவத்திற்கு நான் எப்படி பொறுப்பாக முடியு ம்.
இந்த சம்பவம் நடந்தவுடன் போ லீசார் என்னை அழைத்து மிரட்டி மாணவனின் மருத்துவ செலவை ஏற்றுக் கொள்வதாக என்னிடம் எழுதி வாங்கினர். இதன் பிறகு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்ட மாணவன் கார்த்திக் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டுள் ளான். என்னிடம் இருந்து பணம் கறப் பதற்காக ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அவர்கள் போனில் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார் கள்.
“உங்களை கைது செய்யும் வரை நாங்கள் ஓய மாட்டோம். நீங்கள் பணியிலும் நீடிக்க முடியாது”” என்று மிரட்டி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை நான் சட்டப்படி எதிர்கொள்வேன்.
பள்ளிக் கூடத்தில் வைத்து ஒரு மாணவன் செய்த தவறுக்கு தலை மை ஆசிரியரான என்னை தண்டிப்பது எந்த விதத்தில் நியாமாகும். எனவே எனக்கு உரிய நீதி வழங்க வேண்டும். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்ய உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மாணவர்களின் விளையாட்டு பெற்றோருக்கும், பள்ளிக்கும் இடை யே பிரச்சினையை உருவாக்கி உள்ளது.
news in malaimalar