இந்திய பார் கவுன்சில் அனைத்து மாநில பார் கவுன்சிலுக்கு ஓரு சுற் றறிக்கை அனுப்பி உள்ளது. நாட்டில் சில மாநில பார் கவுன்சிலில்
வக்கீல்கள் தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள விதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாடு முழு வதும் ஒரே மாதிரியாக அமல் படுத்த பார் கவுன்சில் கூட்டத் தில் முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி வக்கீல்கள் தங்கள் உரிமத்தை 5ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக் கொ ள்ள வேண்டும். அதற்கு உண்டான படிவத்தை பூர்த்தி செய்து ரூ. 600 செலுத்தி தங்களது உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இந் த நடைமுறையானது உடனடியாக அமுலுக்கு வருகிறது. இது கட் டாயமாக்கப்பட்டுள்ளது.
பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்த வக்கீல்கள் தங்களது உரிம
த்தை 6 மாத காலத்திற்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு புதுப்பி த்துக் கொள்ளாத வக்கீல்கள் பெயர் பார் கவுன்சில் என் ரோல்மென்ட் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
தொழில் செய்ய அனுமதிக்கப்படமாட் டார்கள். பார் கவுன்சிலின் இந்த உத்தரவு மூலம் பிறதொழில் செய்யும் வக்கீல் கள், கோர்ட்டிற்கு செல்லாத வக்கீல்கள் ஆகியோர் வக்கீல்களுக் கான சேமநல நிதியின் பயனை பெறுவதை தடுக்க முடியும். தொழில் செய்யும் வக்கீல்க ளுக்கு சேமநல நிதி கிடைக்க வழி வகு க்கும்.
மத்திய அரசின் உயர் கல்வி சட்ட மசோதாவை கண்டித்து இம்மாதம் 11, 12 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய போராட்டத்திற்கு இந்திய பார் கவுன்சில் அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழக வக்கீல் கள் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டு ம் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் கேட்டு க்கொ ள்கிறது. தமிழ்நாடு பார் கவுன்சில் மூலம் வழங்கப்படும் ஸ்டிக்கரை மட்டுமே வக்கீல்கள் தங்களது வாகனங்களிலும், மனைவியின் பெயரில் உள்ள வாகனங்க ளிலும் ஓட்டிக் கொள்ள வேண்டும்.
வக்கீல் அல்லாதவர்கள் சாதாரண ஸ்டிக்கரை பயன்படுத்துவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி னார்.
பேட்டியின்போது பார் கவுன்சில் துணை தலைவர் அமல்ராஜ், செய லாளர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர்கள் கே.வேலுச்சாமி, கே.ஏ. வெங்கடேசன், வி.கார்த்தி கேயன் ஆகியோர் உடன் இருந்தனர்.
news in malaimalar
good