ஆளுங்கட்சியை கண்டித்து, மாநில அளவில், தி.மு.க.,வினர் சிறை நிரப்பும் போராட்டத்தை இன்று நடத்துகி ன்றனர். சென்னை தேனாம் பேட்டை டி. எம்.எஸ்., அலுவலகம் முன் நடைபெறும் போராட்டத்தில், பங்கேற்க வரும் கட்சி யினரை, சிறைக்கு வழி அனுப்பி வைக்க , தி.மு.க., தலைவர் கருணாநிதி திட்ட மிட்டுள்ளார். போராட்டத்தில் கலந்து கொள்ள ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக் கு டில்லி சி.பி.ஐ., கோர்ட் அனுமதி அளித் துள்ளதால், அவர் சென்னையில் பங்கே ற்பது உறுதியாகியுள்ளது. கண் புரை சிகிச்சையை மேற்கொண்ட பொரு ளாளர் ஸ்டாலின், போராட்டத்தில் பங் கேற்றால், அவரது கண்ணிற்கு நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ள தால், போராட்டத்தில் அவர் பங்கேற்பாரா? என்பது கேள்விக்குறி யாக உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள, மாவட்ட தலைநகரங்களில் அரசு அலு வலகம் முன், இன்று காலை 10 மணிக்கு, சிறை நிரப்பும் போராட்டத் தை தி.மு.க.,வினர் நடத்துகின் றனர். போலீசாரின் முன்னெச்ச ரிக்கை கைது படலத்தில், சிக் கிக் கொள்ள விரும்பாத தி.மு. க., நிர்வாகிகள், நேற்று முன்தி னம் இரவிலிருந்து, தங்களது வீடுகளில் தங்காமல், வெளியூர் களுக்கு பறந்து சென்றனர். சென் னை மாவட்ட நிர் வாகிகள் பலர், தங்களது உறவினர்களின் வீடு களில் சென்று தங்கியுள்ளனர். அம்பத்தூர் பகுதியை சேர்ந்த தி.மு.க .,வினர், ஆந்திராவு க்கு சென்று தலைமறைவாகியுள்ளனர்.
கருணாநிதி வருவாரா? தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த தி.மு. க., பிரமுகர்கள் சிலர், “குளு குளு’ குற்றாலம் சீசன் துவங்கியுள்ள தால், அங்கு சென்று தங்கியுள்ளனர். நேற்று மாலையில் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்டு, இன்று காலையில், சென்னைக்கு வந்து இறங்கி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். தேனாம்பேட் டை டி.எம்.எஸ்., அலுவலகம் முன், நடக்கும் போராட்டத்தில், பங் கேற்கும் கட்சியினர், கைது செய்ய ப்படும் போது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், கருணாநிதி காரில் உட்கார்த்த வண்ணம், தொண்டர்களை பார்த் து, கை அசைத்து வழி அனுப்பி வைக்க, அவர் திட்டமிட்டுள்ளதா க கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
கனிமொழியும் பங்கேற்பு: போராட் டத்தில் பங்கேற்க, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில், கனிமொழி அனுமதி பெற்றுள்ளதால், அவர் சென் னையில் பங்கேற்பது உறுதி யாகியுள்ளது. கனிமொழி பங்கேற்ப தால் கட்சியின் பொருளாளர் ஸ்டாலினும் பங்கேற்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர். கண்புரை சிகிச்சையை அவர் மேற்கொண்டு ள்ளதால், தினமும் சொட்டு மருந்து கண்ணில் ஊற்ற வேண்டிய நிர் பந்தம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டுள்ளது. சிறைக்கு சென்றால், கண் ணில் நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்று டாக்டர் அறி வுறுத்தியுள்ளனர். டாக்டரின் அறிவுரை யை மீறி, போராட்டத்தில் அவர் பங்கேற்பாரா? என்பது இன்று தெரிய வரும் என்கிறது அக் கட்சி வட்டாரம்.
– தினமலர் நிருபர் –