Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கைதாகியுள்ள திமுகவினரை எப்படி சிறைகளில் அடைப்பது? – விழிபிதுங்கும் தமிழக காவல்துறை

திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்க ளை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதா க தகவல்கள் கூறுகின்றன.

தமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைக ள் உள்ளன. இதில் 9 இடங்க ளில் மத்திய சிறைச் சாலைக ள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடி யும். தற்போது சிறைகளில்13,970 கைதிகள் உள்ளனர்.

இன்று நடந்த திமுக சிறை நிரப்பும் போராட் டத்திற்கு சில ஆயிரம் பேர் கூடுவார்கள் என் று அரசும், காவல்துறை யும் எதிர் பார்த்திருந்த ன. ஆனால் எதிர்பாராத விதமாக 1 லட்சத்திற்கு ம் மேற்பட்டோர் கூடியு ள்ளதாக தெரிகிறது. அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு ஆங்கா ங்கு கல்யாண மண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்து இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படு த்தி சிறையி்ல அடைக்கவேண்டும். ஆனால் இத்தனை பேரையும் எப் படி சிறைகளில் அடைப்பது என்று தெரியாமல் காவல் துறையினர் விழித்துக் கொண்டுள்ளனராம்.

சென்னையில் மட்டும் 50,000  பேர் வரை கைதாகி யுள்ளனர். ஆனால் புழல் சிறையில் இத்தனை பேரையு ம் அடைக்க முடியாது. சரி வேலூருக்கும் பிற ஊர்களு க்கும் கொண்டு போவதாக இருந்தாலும் , அந்தப் பகுதிக ளிலும் பல ஆயிரம் பேர் கை தாகியுள்ளனர். எனவே திமுக வினரை எப்படி சிறைகளில் அடைப்பது, இட வசதி போதாதே என்று காவல்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.

ஒரு 50 ஆயிரம் பேர் வரை கூடலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலை யில் யாரும் எதிர்பாராதவிதமாக லட்சத்திற்கும் மேற்பட்டோர் தி.மு. க. போராட்டத்திற்கு திரண்டது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப் பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி –  முகநூல், ப‌டங்கள் கூகுள்

Leave a Reply