Friday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிறை நிரப்பும் போராட்டம்: ஸ்டாலின், கனிமொழி கைது- அணி, அணியாக வந்து தி.மு.க.வினர் மறியல்

தி.மு.க.வினர் மீது நில அபகரிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக் குகள் தொடரப்படுவது, குண்டர் சட்டத்தில் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை கண்டி த்து, ஜூலை 4ந்தேதி சி றை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்று தி.மு. க. செயற்குழுவில் முடிவு செய்ய ப்பட்டது. 

தி.மு.க. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு தயார் ஆகும் வகையில் தமிழ் நாடு முழுவதும் அறப்போ ர் விளக்க பொதுக்கூட்ட ங்கள் நடத்தப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் பெருமளவில் தி.மு.க.வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். போராட் டத்தில் பங்கேற்பவர்கள் பட்டியலை முன்னதாகவே கட்சி தலை மையிடம் வழங்க வேண்டும். வன்முறைக்கு இடம் கொடுக்காமல் போராட்டம் நடத்த வேண்டும். கைது செய்யப்படும் தொண்டர்களும், நிர்வாகிகளும் ஜாமீனில் வெளிவரக் கூடாது என்று தி.மு.க. தலை வர் கருணாநிதி அறிவித்துள்ளார். 

இதையடுத்து சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்கும் தி.மு.க. வினரின் பட்டியல் தயாரித்து கட்சி தலைமையிடம் கொடுக்க ப்பட்டது. முன் எச்சரிக்கையாக கைது செய்யப்படுவதை தவிர்க் க தி.மு. க.வினர் 2 நாட்களாக சொந்த ஊரை விட்டு வேறு இட ங்களில் தங்கி இருந்தனர். மாவ ட்ட தலைநகரங்களில் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலை மையில் மறியல் போராட்டத்தி ல் தி.மு.க.வினர் பங்கேற்பது. மற்ற நகரங்களில் முன்னாள் அமை ச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் தலை மையில் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட் டது. 

ஏற்கனவே முடிவு செய்தபடி ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கு பெற தயாராக இருந்தார்கள். தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட் டம் நடத்த திட்டமிட்ட இடங்களில் தி.மு.க.வினர் இன்று காலை 9 மணி அளவில் போராட்டத்துக்கு தயார் ஆனார்கள். வடசென்னை கொளத்தூர் பகுதி செம்பியம் சார் பதிவாளர் அலுவலகம் எதிரே நடைபெறும் மறியல் போராட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 

அதன்படி மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆர்ப்பாட்டம் செய்தார். அப்போது தி.மு. க. வினர் மீது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக் கு எதிராக தொண்டர்கள் கோஷமிட்டனர். இந்த போராட்ட த்துக்கு தி.மு.க. சட்டத்துறை இணை செய லாளர் கிரிராஜன், கவுன் சிலர் தே.வ. ஜவகர் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். 

கொளத்தூர் பகுதி செயலாளர் முரளிதரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை பனகல் மாளிகை எதி ரே நடந்த போராட்டத்தில் கனிமொழி எம்.பி., முன்னாள் மேயர் மா. சுப்பிரமணியன் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் பங்கேற்றனர். அவர் களும் கைது செய்யப்பட்டனர். 

இதற்கு பகுதி செயலாளர் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் சைதை குணசேகரன், தாயகம் கவி, கென்னடி, சைதை சம்பத் உள்பட போராட்டத் தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென் றனர். 

சென்னை சேப்பாக்கம் எதிரே நடந்த போராட்டத் தில் தென்சென்னை மாவ ட்ட செயலாளர் ஜெ.அன்ப ழகன், நடிகை குஷ்பு, கட்சி நிர்வாகிகள் காமராஜ், மதன் மோகன், சுரேஷ்குமார், ஜெகதீசன், மதிவாணன், ரேணுகா வேந்தன், செழியன் , பொன்னரசு உள்பட ஏராளமான தி.மு.க.வினர் பங்கே ற்றனர் . அனைவரையும் போலீசார் கைது செய் தனர். 

சென்னையில் மொத்தம் 16 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது. வியாசர்பாடி குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் வட சென்னை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் கலந்து கொண்டார். புரசைவா க்கம் தாலுகா அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் தமிழ் வேந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம், தண்டையார் பேட் டை மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே நடந்த போராட்டத் தில் முன்னாள் எம்.எல்.ஏ. சேகர்பாபு, டன்லப்ரவி, பேசி ன்பிரிட்ஜ் மண்டல அலுவல கம் அருகே நடந்த போராட் டத்தில் சற்குண பாண் டியன், கிண்டி தாசில்தார் அலுவல கம் அருகே நடந்த போராட்டத் தில் முன்னாள் கவுன்சிலர் தன சேகரன் ஆகியோர் பங் கே ற்று கைது ஆனார்கள். 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் நடந்த மறியல் போரா ட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரு மான தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர் வா கிகள் பொன்மொழி, சுகுமார், சேகர், சன் பிராண்ட் ஆறுமுகம், வேதா சலம், பாண்டியன், வெங்கடேசன், செல்வம் உள்பட ஏராளமா னோர் பங்கேற்றனர். 

தாம்பரம் தாசில்தார் அலுவலகம் அருகே தாம்பரம் நகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் மல்லிகாமோகன், ஜானகி ராமன், எஸ்.சேகர், ராஜேந்திரன், லோகநாதன், மோகன், ராமச் சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இது தவிர ஆலந்தூர், உத்திரமேரூர், மதுரா ந்தகம், திருக்கழுக்குன்றம், செய் யூர், ஸ்ரீபெரும் புதூர், சோழிங்க நல்லூர் தாலுகா அலுவலகங்கள் முன்பும், செங்கல்பட்டு கோட்டாட் சியர் அலுவலகம் அருகிலும் என காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் போராட்டம் நடந்தது. இதி ல் பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

இதுபோல் நெல்லை, மதுரை, கோவை, தஞ்சை, தூத்துக்குடி, நாகப் பட்டினம், திருவாரூர், திருச்சி, சேலம், திருப்பூர், அரியலூர், பெரம் பலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க.வினர் அணி அணியாக கலந்து கொண்ட னர். 

போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைதுசெய்து வேனி ல் அழைத்துச் சென்றனர். முடிவில் அனைவரும் திருமண மண்டப ங்களின் வைக்கப்பட்டனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து சிறைச் சாலைக்கு கொண்டு போகப்படுகிறர்கள்.

news in malaimalar

Leave a Reply