Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மனதை மயக்கிய கோட்டு வாத்தியக் கலைஞர் ரவிகிரண்

அண்மையில் கொரட்டூர் கல்சுரல் அகடமியில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், சித்திர வீணை ரவிகிரணின் கோட்டு வாத்திய இசை நிகழ்ச்சி மனதை கொள்ளை கொண்டது.

இசையில் உலகப் புகழ் பெற்றுள்ள ரவிகிரண், குழந்தை மேதை யாக இசைத் துறையில் ஒளி வீசத்துவங்கி, இன் று, “சங்கீத சாம்ராட்’ ஆக முடிசூட்டிக் கொண்டிரு க்கிறார் என்பதற்கு, இவ ருடைய கடும் உழைப்பு, இசைத் தேடல் முயற்சி முக்கிய காரணம். இவற் றுடன் மூத்த கோட்டு வாத்தியக் கலைஞர் அம ரர் நாராயண அய்யங்காருடைய பேரன் என்பதும் குறிப்பிடத்தக்க உண்மை.

நிகழ்ச்சியின் ஆரம்பமே அமர்க்களமான விருந்து செவிகளுக்கு கன நவராக பஞ்சகமாக நாட்டை, கவுளை, வராளி, ஆரபி, ஸ்ரீராகம், நாராயண கவுளை போன்ற ராகங்களை இழைத்து நயமாக வாசித்த வர்ணம் மிகச் சிறப்பாக, எடுப்பாக அமைந்திருந்தது.

அபூர்வமாக இந்த நிகழ்ச்சியில் ரவிகிரண் வாசித்த கைகவசி ராக விரிவுகள் படு மதுரமாக இருந்தன. ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுடைய வாசாம கோசரமே என்ற புகழ் பெற்ற பொருள் அடங்கிய கீர்த்தனத் தை நயமாக பொருள் அடங்கிய கீர்த்தனத்தை நயமாக வாசித்து பாராட்டைப் பெற்றார். ஸ்வரங்கள் படு சொகுசாக பவனி வந்தன.

நிகழ்ச்சியில் முடி சூட்டிக் கொண்ட வாசிப்பு பிரதான சங்கராபரண ராக விரிவுகள் ராக ஆராய்ச்சியில் சங்கராபரணம் மன நோயை குணப்படுத்தும் என்று அறியப்பட்டது. நூறு சதவீதம் உண்மையென் று உணர வைத்த அபார வாசிப்பு.

ஊத்துக்காடு கீர்த்தனங்களில் ஸ்பெஷலிஸ்ட் ரவிகிரண் என்பது தொடர்ந்து சங்கராபரணத்தில் அவர் கண்ணனைப் பற்றிய கீர்த்தன ம் தெள்ளத் தெளிவாக விளக்கியது. ஒரு குழலின் மூலம் உல கை மயக்கிய கண்ணனை அவர் பாடிய அழகும் கூடவே அந்த வரிகளை வாசித்த நயமும் படு ஜோர் அனுபவம் இந்த நிகழ்ச்சியில் எனலாம். ஸ்வரப்ரஸ்தாரம் படு டெக்னிகல். புள்ளி தள்ளிய லய பங்கீடுகள் வியக்க வைத்தன.

காபி ராக ஜாவளி, ரவிகிரண் இயற்றிய அம்சாநந்தி தில்லானா எல் லாமே நிகழ்ச்சியில் மதுர துளிகள். இந்நிகழ்ச்சியில் அக்கரை சுப்பு லட்சுமியின் வயலினில், அவர் வாசிப்பில் அடக்கமாக, நயமாக அனு சரணையுடன் வாசித்த விதம், ராக விரிவுகளை மதுரமாக இழைத் து, கச்சிதமாக வாசித்து வழங்கியது. ஸ்வரங்களில் பளிச் சென்ற வாசிப்பு இவை அனைத்துமே மெருகு ததும்பி மனம் கவர்ந்தன. நெய் வேலி நாராயணனின் மிருதங்க வாசிப்பு அபாரம்.

– மாளவிகா

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: