Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"விவேக்கையும் வடிவேலையும் பலருக்கு பிடிக்கவில்லை" – நீலிமாராணி

தொலைக்காட்சித் தொடர்களில் அழகாய், வில்லத்தனமாய், அமை தியாய் நடித்து வருபவர் நீலிமா ராணி. சினிமாவிலும் நடித்து பெய ரெடுத்திருக்கிறார். அன்பாய் நடிப்பதை விட வில்லியாய் நடிப் பதே பிடித்திருக்கிறது என்று கூறு கிறார் நீலிமா.

கோலங்கள் தொடரில் ஆரம்பித்த வில்லத்தனம் தென்றலில் தொட ர்ந்தது. ஆனால் அழுகை அமுதா வாக செல்லமே தொடரில் நடிப் பதும் வித்தியாசமான அனுபவம் தான் என்கிறார் நீலிமாராணி.

ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட கதைகள்தான்; பார்த்த முக ங்கள்தான் என்றாலும் சீரியல்களில் ஏதோ ஒரு விஷயம் நாளுக்கு நாள் புதுமையை ஏற்றிக் கொண்டிருக் கிறது. படித்தவர்களும் தொ ழில் நுட்பம் தெரிந்தவர்களும் சீரியலுக்கு வந்தது தான் அதற்கு கார ணம்.

இப்போ நிறைய பேர் சீரியல்களை பார்க் க ஆரம்பித்து விட்டனர். காரணம், காமெ டி சேனல் என்ற பெயரில் விவேக்கையும் வடிவே லையும் மாற்றி மாற்றி காட்டுகி றார்கள். அது பலருக்கு பிடிக்கவில்லை. அதிலிருந்து நேயர்களை விடுவித்து ரிலாக்ஸ் கொடுப்பது சீரியல்கள்தான்.

சீரியல்களில் பெண்களையே முன்னி லைப்படுத்த காரணம் சீரியலுக்கு பெண்கள் ரசிகைகளாக இருப்பது தான். பெண்களுக்கு பெண்கள்தான் வில்லியாக இருக்க முடியும். அதனால்தான் சீரியல்களில் வில்லி கேரக்டர்கள் பெண்களால் ரசிக் கப்படுகின்றன. பாசமுள்ள அம்மா, அன்பான மனைவி, அருமையா ன காதலி போன்ற கேரக்டர்கள் கொ டுக்காத அதிர்வுகளை வில்லி கதாபாத்திரம் மட்டுமே கொடுக்கிற து. அதனால் சீரியல்களில் என் சாய்ஸ் வில் லிதான்” என்றார் நீலிமா ராணி.

சினிமாவில் திமிரு, “நியூட்டனின் 3-ம் விதி’, “ராஜாதிராஜா’ படங்களும் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கின்றன. மேலும் “ஜக்கு பாய்’, “புகைப்படம்’, “ரசிக் கும் சீமானே’ ஆகிய படங்களில் நடித்தி ருக்கிறேன். ‘விதை’ என்ற ஈழம் தொடர் பான படத்தில் நடித்தி ருக்கிறேன்.

ஏற்கனவே ஆணிவேர் படத்துல நடிச்சே ன். இதில் என் நடிப்பைப் பார்த்துட்டு லண்டனில் வசிக்கும் ஒரு ஈழத் தமிழர் குடும்பம் நேர்ல சந்திச்சாங்க. உடைஞ்ச குரல்ல என்னை அவங்க மகளா நினை ச்சுப் பேசினது ரொம்பவே பாதிச்சது. அந்த அன்புதான் இப்ப மறுபடி யும் ஈழம் தொடர்பான படத்துல நடிக்க தூண்டுதல். எத்தனையோ சினிமாவில் நடித்தாலும் சீரியலில் நடிப்பதுதான் எனக்கு திருப்தி யாக இருக்கிறது என்று கூறி விடை பெற்றார் நீலிமாராணி.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: