Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"இயக்குநர் ரவிக்குமார் என்னை காதலித்தார்" – நடிகை சுஜிபாலா

நடிகை சுஜிபாலா உண்மை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இத்திரைப்படதை புதிய இயக்குநர் ரவிக்குமார் அவரே இயக்கியும், கதாநாயகனாக நடித்து வரு கிறார். இந்த படப்பிடிப்பின்போது ரவி க்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் காதல் மலர்ந்த்தது. இவர்களது காதலுக்கு சுஜிபாலாவின் பெற்றோர் பச்சைக்கொடி காட்ட‍வே, நேற்று முன்தினம் மாலை நாகர்கோவில் கொய்யன் விளையில் உள்ள திருமண மண்டபத்தில் இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது

இவர்களைது நிச்சயதார்த்த‍த்தில் நடி கைகள் ஷகீலா, அல்போன்சா, உட்பட ஏராளமானோர் கலந்து கொ ண்டு மணமக்களை வாழ்த்தியது பற்றி சுஜிபாலா கூறுகையில், “தற் போது நான் உண்மை மற்றும் விஷா லுடன் ஒரு படம் என சில படங்களி ல் நடித்து வருகிறேன். ரவிக்குமார் என்னை காதலித்தார். திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக கூறி னார். நான் எனது பெற்றோரின் சம்ம தத்தை பெறுமாறு கூறினேன். அவரு ம் எனது பெற்றோரை சந்தித்து திரு மணத்துக்கு சம்மதம் வாங்கினார். நேற்று எங்கள் திருமண நிச்சய தார் த்தம் நடந்தது. அக் டோபர் மாதம் திருமணம் நடக்கிற து,” என்றார்.

ஏற்கனவே நடிகை சுஜிபாலா ச‌ந்திர முகி, அய்யா வழி, கிச்சா வயது 16, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளை யம் உட்பட பல தமிழ் திரைப்படங் களில் நடித்திருக்கிறார் என்பது கூடு தல் தகவல்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: