ஜூலை 2012 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்
இந்தியத் துணைக்கண்டத்தின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்? என்பதிலான சிக்கல், முக்கல், முணகல் எல்லாம் ஒரு வழியாய் முடிந்திருக்கின்றன• ஆட்டுவிக் கப்படும் ஆளுங்கட்சியான காங் கிரஸ், வேறு வழியின்றி பிரணாப் முகர்ஜியையும் . . எதிரி களையே தன் கூட்டாளிகளாக கொண்டு குழம்பித் தவிக்கும் பா(வம்)ரதீய ஜனதா கட்சி தன்னி டம் ஆளில்லாததால் . . . சங்மாவையும் வேட்பாளர்களாக அறிவித் துள்ளன•
மம்தாவின் அதிரடியாலும், முலாயமின் பல்டியாலும், நிதிஷ்குமா ரின் திடீர் மதச் சார்பற்ற ஞானோதயத்தாலும், சிவசேனாவின் ஜாதி வெறியாலும், கலைஞரின் காலத்தின் கட்டாய சரணாகதியாலும் (வாழ்க அவர்தம் தமிழுண ர்வு!) பா.ஜாகவின் பயம் கல ந்த தயக்கத்தாலும் . . அறிவியல் ஞானி அப்துல் கலாம் மீண்டும் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு தட்டிப் பறிக்கப்பட்டிருக்கிற து.
ஆனால், இந்த குடியரசுத் தலைவர் தேர்தல் மூலம் பல கட்சிகளின் சாயம் வெளுத்துப் போயி ருப்பதென்னவோ உண்மை.
கலாமைக் காட்டி காங்கிரஸை மிரட்டிய மம்தாவின் அரசியலுக்கு இடைவெளி ஏற்பட்டுள்ளது. முலாயம் சிங்கின் நம்பகத் தன்மை அப்பட்டமாய் வெளிப்பட்டிருக்கிறது. நிதிஷ்குமாரின் எதிர்பார்ப்பு (பிரதமர் பதவி) என்னவென்று தெரிந்திருக்கிற து. தமிழனுக்குத் தமிழனே எதிரி என்ப தை இரண்டாவது முறையாக (முன்பு மூப்பனாருக்கு பிரதமராக வாய்ப்பு) கலைஞர் மெய்ப்பித்திருப்பது உலகத் தமிழனுக்கு நெத்தியடியாய் உணர்த்த ப்பட்டிருக்கிறது.
இந்திய போன்ற ஜனநாயக நாட்டில் அரசியலில் வேறுபாடுகள், மதமாச்சாரியங்கள் காழ்ப்புணர்வுகள், இருப்பதில் தவறில்லை, ஆனால், நம் நாட்டின் ஒற்றுமைக்கும் ஜனநாயக கோட்பாட்டிற்கும் அடையாளமாக (ICON) விளங்குகின்ற முதல் குடிமகன் தேர்விலுமா அரசியல்? அடச்சே!
இந்திய ஜனநாயகத்தின் உயர்ந்த பதவியி ன் மரியாதை இப்படி ஏலம் விடப்பட வே ண்டுமா? என்ற ஆதங்கமும் கேள்வியும் தேசத்தை நேசிக்கிறவர்களின் மனதி ல் ஏக்கமாய் வெளிப்படுகிறது. எல்லாம் அர சியல் விதி (சதி)யின் விளையாட்டு என்று விட்டு விடலாமா. . .? கூடாது . . . பின்பு என்ன செய்வது . . . ?
சாயம் வெளுத்துப்போன இந்த மரத்த சிந்தனையாளர்களை ஓரங்கட்டி உட்கார வைக்க இப்போதிலிருந்தே ஒரு மித்த உரத்த சிந்தனையாளர்களை ஒன்று சேர்ப்போம்.
சாயம் வெளுத்தது. அப்படி போடு அரிவாளை.இதுதான் தங்களது சிறந்த பதிவு.
வாழ்க வளமுடன்.
snrmani@rediffmail.com
thanks
ok