Thursday, February 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நித்யானந்தாவுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்

உலகம் முழுவதும் ஆன்மீக சாம்ராஜ்யத்தை நிறுவி வலம் வந்தவர் நித்யானந்தா. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் நடத்திய அந்தரங் க சேட்டைகளால் சந்தி சிரிக்கும் அளவுக்கு வந்து விட்டார். காம களியாட்டம் போட்டாலும் காசு சம்பாதிப்பதிலும் குறியாக இருந்து ள்ளார். தனது உடன் பிறப்புகளை பங்குதாரர்களாக போட்டு ப்ளீஸ் இன்வெஸ்ட் மென்ட் கார்ப்பரேஷ ன், நித்யானந்தா இன்வெஸ்ட்மெ ன்ட், ஆனந்தா பிஸ்னஸ் சொல் யூஷன் போன்ற பல நிறுவனங்க ளையும் தொடங்கி நடத்தி வருகி றார்.

இந்த நிறுவனங்களுக்கு பல வழிகளில் நிதி திரட்டி இருக்கிறார். குஜராத் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பாபட் லால் சாவ்லா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரபலமான தொழி ல் அதிபர். அவரது மனைவி பிரபலமான டாக்டர். இந்திய வம்சா வழி யினர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், கோடிகளில் புரண் டாலும் தாய் நாட்டு கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் வாழ ஏங்கு வார்கள். அப்படி ஏங்குபவர்கள் வரிசையில் பாபட்லால் தம்பதியும் ஒன்று. 

கடந்த 2005-ல் அமெரிக்காவில் நித்யானந்தா சுற்றுப்பயணம் செய்த போது அவரது ஆன்மீக உரை யையும், வேத பாராயண திற மையையும் பார்த்து பாபட்லால் தம்பதியினர் மெய்சிலிர்த்து போ னார்கள். ஆன்மீக குருவாக போற்றி நித்யானந்தாவின் தரிச னத்துக்கு தவம் கிடந்தனர். 

பாபட்லாலின் வசதி வாய்ப்புக ளை புரிந்து கொண்ட நித்யான ந்தா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேதா பல்கலைகழகம் நிறுவ ஆசைப்படு வதாக கூறினார். அதை வரவேற்ற பாபட்லால் 1.7 மில்லியன் டாலர் அதாவது ரூ.9.35 கோடி பணம் நன்கொடையாக வழங்கினார். அந்த பணத்தை வைத்து நித் யானந்தா வேத பல்கலைக்கழகம் தொடங்க வில்லை. மாறாக தன து நிறுவனங்களில் முதலீடு செய்து விட்டார். 

இதற்கிடையில் நித்யானந்தா- ரஞ்சிதா சல்லாப சி.டி. வெளியான தை பார்த்ததும் பாபட்லால் அதிர்ந்து போனார். நித்யானந்தாவின்   இன்னொரு முகத்தை பார்த்த பாபட்லால் கொடுத்த பணத் தை திருப்பி தந்து விடும்படி கேட்டுள்ளார். ஆனால் நித் யானந்தா திருப்பி கொடுக்க வில்லை. இதனால் ஆவே சம் அடைந்த பாபட்லால் கலி போர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்டீபன் வில்சன் கடந்த வாரம் அதிரடியான தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:- 

நித்யானந்தா பவுண்டேஷன் அமெரிக்க நிதிச்சட்டப்படி செ யல்பட வில்லை. அதனால் இது ஒரு மோசடி நிறுவனம் இந்த நிறுவனத்தில் ஏமாற்றப்பட்ட பாபட்லால் சாவ்லாவுக்கு 1.565 மில்லியன் டாலரை திருப்பி தர வேண்டும். இந்த வழக்கின் தண்ட னை விபரம் 19-ந்தேதி அறிவிக்கப்படும்.  இவ்வாறு அதில் கூறி உள் ளார். 

எனவே 19-ந்தேதி தண்டனை விபரம் என்ன? என்பது தெரிய வரும். அமெரிக்க சட்டங்கள் மோசடியை தீவிரமாக தண் டிக்கக் கூடிய வகையில் உள் ளது. கடுமையான தண்டனை களுக்கு வாய்ப்பு இருக் கிறது என்று சட்ட வல்லுனர்கள் கரு த்து தெரிவித்துள்ளனர். 

நித்யானந்தாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆப்பு வைத்ததை கேள்விப்பட்டதும் மதுரை ஆதீன மட விவகாரமும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. மதுரை ஆதீன மீட்பு குழுவி னர் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள் ளனர். 

இது பற்றி போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை கண்ணன் கூறும் போது, இனியாவ து மதுரை ஆதீனம் சுதாரித்து கொண்டு இளைய ஆதீனம் பட்டத்தை திரும்ப பெற வேண்டும். அப்போதுதான் மதுரை ஆதீனத்தின் கவுர வம் காப்பாற்றப்படும் என்றார்.

 – news in malaiamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: