Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரு நடிகைக்காக அடிதடியில் இறங்கிய இரு நடிகர்கள்

டாப்ஸியை காதலிப்பது யார் என்ற போட்டி ஏற்பட்டதால் 2 தெலுங் கு நடிகர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இந்த மோதல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘ஆடுகளம்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப் பவர் டாப்ஸி.தற்போது தெலுங்கு படங்க ளில் நடித்து வருகிறார். தெலுங்கு வில்லன் நடிகர் மோகன்பாபு மகன் மனோஜ் மன்சுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஐதரா பாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி நடந்தது. இதில் மனோஜ் மன்சு, நடிகர் மஹத்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அமைதியாக தொடங்கிய பார்ட்டியில் திடீ ரென்று மோதல் ஏற் பட்டது. மஹத்தை நோ க்கி கோபத்துடன் பாய்ந்தார் மனோஜ், ‘உன் னை தீர்த்துக் கட்டி விடு வேன்’ என்று எச்சரித்தாராம். இதனால் பார்ட்டியிலிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து மஹத் அங்கிருந்து கோபமாக வெளியேறினார்.

இதுபற்றி மஹத் கூறும்போது, ‘பார்ட்டியில் மோதல் சம்பவம் நடந்த து உண்மை. நான் நடிப்பில்தான் இப்போது தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறேன். மனோஜ் என் மீது கோபம் அடைவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை’ என்றார்.

மனோஜ் மற்றும் அவரது சகோதரி லட்சுமி மன்சுக்கும் நெருக்கமா னவர் டாப்ஸி. லட்சுமி தயாரிக்கும் படத்தில் மனோஜுட ன் ஜோடியாக நடித்தும் வருகிறார். அவர்க ளுடனேயே ஐதராபாத்தில் தங்கி இருக்கி றார். இந்நிலையில் மனோஜுக்கும், டாப் ஸிக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே மஹத்துடன் டாப்ஸி நட்பாக பழகி வந்தார். பின்னர் அவருடனான நட்பை முறித்துக்கொண்டார். ஆனால் மஹத் அவரி டம் நட்பை தொடர முயற்சித்தாராம். இதான ல் தான் மஹத் மீது கோபம் அடைந்து அவரிடம் மனோஜ் மோதி யதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் பற்றி லட்சுமி மன்சு கூறும்போது,‘‘மஹத் எங்களது நல்ல நண்பர். எந்த நேரத்திலும் அவரிடம் மனோஜ் முரட்டுத் தன மாக நடந்து கொண்டதில்லை. நண் பர்கள் என்ற முறையில் அவர்களு க்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருக்க லாம். பிறகு ஒன்று சேர்ந்து விடுவார் கள். ஆனால் யாரோ மனோஜ்-மஹத் மோதியதாக கதை கட்டி விடுகிறார்கள்.

எதற்காக மஹத்தை மனோஜ் தாக்க வேண்டும்? சம்பவம் நடந்ததாக கூற ப்படும் பார்ட்டியில் நானும் கலந்து கொண்டேன். ஆனால் மோதல் சம்ப வம் எதுவும் நடக்கவில்லை. ஒரு கண்ணாடி டம்ளர் உடை ந்தது போன்ற சத்தம்கூட என் காதில் விழ வில்லை. மஹத் பார்ட்டி யில் இருந்து புறப்பட்டு சென்ற பிறகுகூட நான் பார்ட்டி நடக்கும் இடத்தில்தான் இருந்தேன்’’ என்றார்.

– சினி கோன்ஸ்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: