Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தாம்பத்தியத்தை தவிர்க்க‍ வேண்டிய தருணங்கள்

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படு வதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண் டும்…?

* கர்ப்பமாக இருக்கும்போ தும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியை க் கட்டாயப்படுத்தி உறவு வைத் துக் கொண்டால், அவளது உடல் மற் றும் மனம் பாதிக்கப்படுவது மட்டு மின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

* பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம் பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப்பிரசவமா அல் லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.

* சாதாரணமாக குழந்தைப்பேற் றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலை யை அடைய ஆறு வாரங்களாகு ம். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உட ல் நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப் பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தர வாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

* குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காய ங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.

* கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.

* பிரசவத்திற்குப் பிறகு பெண்ணி ன் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உற வில் விருப்ப மில்லை என்று தெரி ந்தால், அதற்குக் கட்டாயப் படுத்து வது கூடாது.

* உறவில் ஈடுபடும்போது உடலுற வுப் பாதையில் கடுமையான எரி ச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல் லது.

* கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உற வைத் தொடங்க வேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் உறவு  கொ ண்டால், கருத்தரிக்காது என்று பல ரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக் குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப் புகள் அதிகம்.

* பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப் பதே நல்லது.

* கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத்தவிர்ப்ப து ண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலே யே உறவு கொண்டால் கடுமை யான வலி இருக்கும் என்ற பய த்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

* பிரசவித்த பெண்கள் தாய்ப் பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய் ப்புகள் உண்டு

நன்றி – இளமை

2 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: