அனைவரு(ரையு)ம் நேசிக்கும் அன்பர்
அரக்கோணம் சீ. மோகன்
1996ஆம் ஆண்டு அரக்கோணம் சீ.மோகன் அவர்கள் உரத்த சிந்த னை அமைப்பில் தன்னை இணைத்துக்கொள்ளும்போது படிக்கும் பருவம் முதலே தமக்கு எழுதும் ஆற்றல் அதிகம் என்றும், கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றை அதிக ளவில் படைத்திருப்பதாகவும், அவை களை நூலாக்க விரும்புவ தாகவும் தெரிவித்தார்.
உரத்த சிந்தனையாளர்கள் சேர்ந்து வெளியிட்ட அறிமுக அலைகள் என் ற நூலில் மோகனின் கவிதையும் இடம்பெற்றது.
எதார்த்தமான, நளினமான, ஆழமான வார்த்தைகளைக் கொண்ட கவிதை வரிகள் மோகனுக்கு வரவேற்பளித்து, வாய்ப்புக்களைப் பெற்றுத் தர . . . அப்போதைய சிற்றிதழ்கள், கவியரங்க மேடைகளில் எல்லாம் அரக்கோணம் சீ. மோகனி ன் பெயர் உலா வரத்தொடங்கி யது.
பிரபலமான ஒருவரின் மகனாக இருந்து, முன்னேறி காட்டுவது . . . பதவி அரசியல் செல்வாக்குடன் முன்னேறி காட்டுவது, செல்வந்தரா க இருந்து பெயர் புகழ் குவிப்பதெல் லாம் . . . ஒரு சாதனையா கவே கருத முடியாது.
சாதாரண குடும்பத்தில் பிறந்து, கல்லூரி படிப்போ, தமிழ்த்துறை யோ தொடர்பில்லாத குடும்பத்தில் ஆளாகி, இன்று ஒரு பதிப்பகத் தை நிறுவி, சொந்தமாக ஐந்து நூல் களை வெளியிட்டு, எழுத்தாற்ற ல் கொண்ட பலருக்கு நூல்கள் பதிப்பி த்து தந்து, இருபத்தைந் திற்கும் மேற் பட்ட வானொலி நிகழ்ச்சிகளில் பங் கேற்று, பல்வேறு தொலைக்காட்சிக ளில் 20க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிக ளில் வெளி வந்து, கவியரங்கம், பேச்சரங்கம், கருத்தரங்கம், வரவேற்பு, நன்றி நவிலல, நிகழ்ச்சி தொகுப்பு, நிகழ்ச்சி ஏற்பாடு என அசத்திக் கொண் டிருக்கும் அரக் கோணம் சீ. மோகனின் செயல்பாடுகளைத் தான் நாம் சாதனை
என்று சொல்லவேண்டும்.
அரக்கோணத்திலுள்ள தெற்கு இரயில்வே பொறியியல் தொழிற் சாலையில் 32 ஆவது ஆண்டாக பணிபுரிந்து கொண்டு 16 ஆண்டு காலமாக தமிழ் அமைப்புகள் சமூக நல, பொது நல அமைப்பு களுடன் தொடர்பு கொண்டு, எல்லாத் தரப்பினரும் பாராட்டும் அரக் கோணம் சீ. மோகனை சாதனையாளர் என்று சொன்னால் அது மிகையாகாது.
தான் சார்ந்த இரயில்வே துறையிலும் கவிஞர் சீ. மோகன் சாதித் திருக்கிறார் என்பதற்கு இரண்டு விஷயங்களை இங்கே சொல்லி யாக வேண்டும். இயில்வே டெரி டோரியல் ஆர்மி மூலமாக தேர்வு செய்யப்பட்ட மோகன் சுமார் 150 பேருக்கு கொடுக்கப்பட்ட இரண்டு மாத கால இராணுவப் பயிற்சிலே யே, எஸ்.எல்.ஆர். துப்பாக்கியால் குறிபார்த்து சுடும் போட்டியில் முதல் பதக்கத்தைப் பெற்று, இராணு வ அதிகாரிகளாலேயே அதிகம் பாராட்டப்பட்டிருக்கிறார்.
இரண்டாவதாக இராமேஸ்வரன் – பாம்பன் கடல் பாலத்திற்கு இரு ம்பு கர்டர்கள் (இருப்பு பாதைக்கான பாலங்கள்) செய்து அனுப்பிய விவரங்களை முன்னாள் குடியரசு தலைவர் உயர்திரு. ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களுக்கு இரயில்வே தொழிற்சாலையின் சாதனைகளை யும் பெருமைகளையும் விரிவான கடிதத்தின் மூலமாக தெரியப்படுத்தி, அவரது உதவியாளர் திரு. ஷரிடன் அவர் களின் மூலமாக உடனுக்குட ன் வாழ்த்தும் பாராட்டும் பெற்று, தொழிலாளர்களுக்கும், தொழிற் சாலைக்கும் பெருமைகளையும் புகழையும் தேடித் தந்தவர்.
இதுமட்டுமல்லாமல் இரத்த தானம் செய்வதாக இருக்கட்டும், மருத் துவ முகாம்களை ஏற்பாடு செய்வ தாகட்டும், அதில் சேவை ஈடுபாடு காட்டுவதாகட்டும், விபத்து, அவசர உதவி – என்று எதிர்பார்க்கும் போது முதலிலேயே வந்து விடும் அரக் கோணம் சீ. மோகனை எல்லா வித த்திலும் பாராட்டத் தோன்றும்.
கடந்த 32 ஆண்டுகளாக தம் வாழ்க் கையில் தினம்தோறும் நடைபெ றுகிற நிகழ்வுகளை நாட்குறிப்பில் பதிவு செய்து வருகிறார். தனது சீனிவாசன் பதிப்பகத்தின் மூலமாக 10 நூல்களை வெளியிட்டிருக் கிறார்.
தொலைக்காட்சி, வானொலி நிலை யத்தினர், நாடகத் துறையினர், திரைப்படத் துறையினர், வங்கி அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், பிரபலமான மருத்துவர்கள், நிறுவ னங்களின் மேலாளர்கள் பத்திரிகை யாளர்கள் என அனைவருக்கும் அன்பரானவர் அரக்கோணம் சீ. மோகன்.
உரத்த சிந்தனை சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக பல ஆண்டு கள் தொடர்ந்து செயலாற்றி வருகிற இவருக்கு கவிதை உறவு, அனைத் திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க ம், நல்லோர் வங்கி, தேனி இலக்கிய கழகம், உலக கவிஞர்கள் சங்கம் என பல்வேறு அமைப்புகள் பொறுப் புக்களை தந்து அலங்கரிக்க, தமிழ் படைப்பா ளர்கள் சங்கம், கவிஞர் சீ. மோகனை மாநில பொதுச் செயலாளராக நியமனம் செய்து கிரீடம் சூட்டி அழகு பார்த்திருக்கிறது. சிறந்த வாசக எழுத்தாளருக்கான உர
த்த சிந்தனை விருதினை முதலில் பெற்ற அரக்கோணம் சீ. மோகன், பல்வேறு இலக்கிய சமூக நல அமை ப்புகள், தொண்டு நிறுவனங் கள் மூலமாக பெற்று ள்ள விருது களும் ஐம்பதை நெருங்கிவிட்டன•
உழைப்பும் முயற்சியும் நம்பிக்கை யும் அனைவரையும் அரவணைத் துச் செல்லும் நேர்மையானவராகவும், இருந்தால் வாய்ப்புகளும் பொறுப்புக்களும் தேடி வரும் என்பதற்கு அரக்கோணம் சீ. மோகன் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அவர் மேலும் சாதிக்க வாழ்த்துகிறோ ம்.
நம் உரத்த சிந்தனையின் கடந்த மாத இதழில் அரக்கோணம் திரு. சீ. மோகன் அவர்களை பற்றி நம் உரத்த சிந்தனையின் ஆசிரியரும் உரத்த சிந்தனை (வாசக எழுத்தாளர்கள் சங்கம்)ன் பொதுச் செயலாளருமான உதயம் திரு. ராம் (94442 67103) அவர்கள் எழுதிய பாராட்டு உரை.
தொடர்புக்கு அரக்கோணம் திரு. சீ. மோகன் (94442 67103, 98015406493)