Tuesday, January 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எஸ்.ஐ., தலைக்கு குறி வைத்த இன்ஸ்பெக்டர்: சுக்கு நூறாக நொறுங்கிய "டேபிள் வெயிட்!'

ரவுடிகள், “கழுத்து அறுப்பு’ வழக்கில், “ஸ்டேட்மென்ட்’ எழுதாத, சிற ப்பு எஸ்.ஐ., தலையை குறி வைத்து, இன்ஸ்பெக்டர், “டேபிள் வெயிட் ‘டை தூக்கி எறிந்த சம்பவம், சேலம் பேர்லண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷ னில், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்ஸ்பெக்டரின் நடவடிக்கையால் , அங்குள்ள போலீசார், பயத்தில் உறைந்து போயுள்ளனர்.

சேலம் பேர்லண்ட்ஸ் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக, சந் தோஷ்குமார் உள்ளார். ஏற்கனவே, பள்ளப்பட்டியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியபோது, மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது, தடியடி நடத் தியது உள்ளிட்ட புகார்களால், அங்கிருந்து, கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப் பட்டார். அதன்பின், சூரமங்கலத்திலும், தொடர்ந்து, பேர்ல ண்ட்சிலும் நியமிக்கப் பட்டார்.அதே போலீஸ் ஸ்டேஷனில், சேலம் மணக்காடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி, சிறப்பு எஸ்.ஐ., பணியா ற்றி வந்தார். ஜூன் 26ம் தேதி, இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார், பழனி ச்சாமி தலையை குறி வைத்து, “டேபிள் வெயிட்’டை தூக்கி யெறிந்தார். அவர் தலையை குனிந்து கொண்டதால், தலை தப்பிய து. அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி, மருத்துவ விடுப்பில், வேலையை விட்டு வெளியேறினார். நடந்த சம்பவம் குறித்து, போலீஸ் கமிஷ னர், துணை கமிஷனர், உதவி கமிஷனர், நுண்ணறிவு பிரிவு கமிஷ னர் ஆகியோருக்கு, புகார் மனுவை, தபாலில் அனுப்பி உள்ளார்.

கொலை முயற்சி

சிறப்பு எஸ்.ஐ., பழனிச்சாமி கூறியதாவது: சேலத்தைச் சேர்ந்த ரவுடி கள், கோழி பிரகாஷ், ஜீவன் என்ற ஜீவானந்தம். முன்விரோதத்தில், சில ஆண்டுக்கு முன், கோழி பிரகாஷ் மற்றும் அவனுடைய கூட்டா ளிகள், ஜீவன் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்தனர். அந்த சம்பவத்தில், ஜீவன் தப்பிவிட்டார். “கன்டிஷனல் பெயிலில்’ வெளியில் வந் த கோழி பிரகாஷ், கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகி, கையெழுத்திட்டு வந்தார்.கடந்த மாதம், 21ம் தேதி இரவு 7.45 மணியளவில், கோழி பிரகாஷ், அவனுடைய நண்பன் கணேசன் ஆகியோர், கோரிமேடு ஆத்து க்காடு மாந்தோப்பு பகுதியில், மது அருந்திக் கொண்டிருந்தனர். சரக்கு தீர்ந்து விட்டதால், கணேசன் கடைக்கு சென்றார். அப்போது, ஜீவன், அவனுடைய தம்பி தமிழரசன் மற்றும் கூட்டாளிகள் என, ஆறு பேர், ஒரு வாகனத்தில் வந்தனர். அங்கு தனி யாக இருந்த, கோழி பிரகாஷை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்தனர். அவர் மயங்கி விழுந்ததால், இறந்து விட்டதாக கருதி தப்பி யோடினர். சரக்கு வாங்கிக் கொண்டு திரும்பிய கணேசன், இதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். அவ ரை தூக்கிக் கொண்டு வாகனத்தில் வந்தபோது, கோரி மேடு ஆத்துப்பாலத்தி ல், ஜீவன் தரப்பு நின்று கொண்டிருந்தது. அப்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரையும் விரட்டியடித்தனர். படுகாய மடைந்த நிலையில் இருந்த கோழி பிரகாஷை, சேலம் அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

“ஸ்டேட்மென்ட்’ எழுதவில்லை:கடந்த ஜூன் 22ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, சூரமங்கலத்தில் ஜீவனை மட்டும், பேர்லேண்ட்ஸ் போலீசார் கைது செய்தனர். விசாரணை அதிகாரியாக இன்ஸ் பெக்டர் சந்தோஷ் குமார் இருந்தார். அன்று இரவே, சேலம் ஜே.எம்.5 மாஜிஸ்திரேட் முன், ஜீவனை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறை யில் அடைத்தனர். இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பாக, “ஸ்டேட்மென்ட்’ எழுதிக் கொடுக்க வே ண்டும். அதைத் தொடர்ந்து, போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடந்ததால், சிறப்பு எஸ்.ஐ.,யாகிய நான், பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டேன். 26ம் தேதி காலை 7.30 மணியளவில், ஸ்டேஷன் பணிக்கு வந்தேன். அப்போது, உள்ளே இருந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார், என்னை அழைத்து, எதிரே இருக்கை யில் அமர வைத்தார்.

“டேபிள் வெய்ட்’டால் குறி வைத்தார்:அப்போது, “ஸ்டேட்மென்ட் எழு த முடியாதா?’ என, கேட்டபடி, டேபிளில் இருந்த கண்ணாடி டேபிள் வெயிட்டை, கையில் வைத்துக்கொண்டு மேலேயும், கீழேயும் தூக் கி எறிந்தபடி மிரட்டலாக பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அவரு டைய செயல்பாடு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.திடீரென ஆவேச மான இன்ஸ்பெக்டர், தலையை குறிவைத்து தூக்கியெறிந்தார். நான், தலையை குனிய, அங்குள்ள சுவரில், “டேபிள் வெயிட்’ பட்டு, சுக்கு நூறாக நொறுங்கியது. வாச லில் நின்றிருந்த சென்ட்ரியும், துப்பு ரவு பணியாளரான வெள்ளச்சியும், இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

விடுப்பில் இருக்கிறேன்:அதன்பின், “நீ ஸ்டேட்மென்ட் எழுதக்கூடாது’ என, கூறினார். மாலை 2 மணியள வில், ஐந்து ரோடு பகுதியில் டிராபிக் பணி க்கு அனுப்பி விட்டார். பின், சேலம் மேற்கு குற்றப்பிரிவு உதவி கமிஷனரிடம் நடந்த விவரத்தை கூறினேன். அவர், மருத்து விடுப் பில் செல்லுமாறு அறிவுறுத்தினார். 27ம் தேதி முதல் விடுப்பில் இருக்கிறேன். போலீஸ் கமிஷனர் தரப்பில் எந்தவித விசாரணை யும், என்னிடம் நடத்தப்படவில்லை. எனக்கு, 450 நாள் மருத்துவ விடுமுறை உள்ளது. நான், ஓய்வு பெற ஐந்து மாதமே உள்ளது. அதனால், என்னுடை பணியை விடுமுறையிலேயே கழித்து விடப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

news in dinamalar

Leave a Reply