Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மீன் தொட்டியில் மின் விளக்கா? மீன்களுக்கு ஆபத்து

மீன் தொட்டி இருந்தாலே வீட்டிற்கு அழகு அதிகம்தான். அழகான கண்ணாடி தொட்டியில் வண்ண வண்ண மீன்கள் நீந்துவதை பார்த் தாலே மனஅழுத்தம் குறைந்து விடும். இந்த மீன் தொட்டி களுக்கு அழகுக் காக போட்டிருக்கும் மின் விளக் குகள் சில சமயம் அந்த மீன் களுக்கே ஆபத்தாகி விடும். எனவே சரியான நேரத்தில் விளக்குகளை நிறுத்தி வைத்து பின்னர் அவற்றை எரிய விட வேண் டும். எந்த மாதிரி நேரத்தில் விளக்குகளை எரிய விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளனர் மீன்வளத்துறை அதிகாரிகள்.

மீன் தொட்டிகளுக்கு போட்டிருக்கும் விளக்குகளை குறைந்தபட்சம் 8 முதல் 10 மணிநேரம் வரை எரியவிட்டால் போதும். இல் லையெனில் மீன் தொட்டியில் உள்ள தண்ணீர் சூடேறி மீன்கள் இறந்து விடும்.

மீன் தொட்டியில் உள்ள செடி கள் நிஜ செடிகளாக இருக்கும் பட்சத்தி ல் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை விளக்குகளை எரிய விடலாம். ஏனெனில் செடி களுக்கு பச்சையத்திற்கு தேவையான ஒளியை அந்த வெளிச்சத்தின் மூலம்தான் பெற்றுக்கொள்ளும் என்பதால் அரை நாள் வரை விளக்குகளை எரியவிடுங்கள். மீன் தொட்டியில் உள்ள செடிகள் செயற்கையானவை என்றால் அதிகநேரம் லைட் எரியத் தேவையி ல்லை.

எந்த வகையான மீன்களை வளர்க்கிறீர்களோ அதற்கு தகுந்தவாறு விளக்குகளை போடலாம். சில மீன்கள் அதிக வெளிச்சத்தை விரும்பும்.குறைந்த பவர் கொ ண்ட தண்ணீர் விளக்குகளை எரியவிடலாம். இதனால் வெளி ச்சம் கிடைக்கும் ஆனால் தண் ணீர் சூடாவதில்லை.

மீன் தொட்டி எந்த அளவிற்கு உள்ளதோ அதற்கேற்ப விளக்கு களை போடலாம். அதேபோல் மீன்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் விளக்குகளை போட லாம். மீன் தொட்டியில் உள்ள தண்ணீர் சூடாவதாக உணரும்பட்சத் தில் லைட்களை நிறுத்திவிடலாம். காலை, மாலை என இரண்டு நேரங்களில் மாற்றி மாற்றி விளக்குகளை போட்டு நிறுத்தலாம். இதனால் தண்ணீர் அதிகம் சூடேறாது மீன்களும் பாதுகாப்பாக இருக்கும்.

இந்த ஆலோசனைகளை பின்பற்றுங்கள் மீன் தொட்டி அழகாக இருப்பதோடு மீன்களும் ஆரோக்கியமாக நீந்தி விளையாடும்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: