Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முகநூலில் அப்துல் கலாம் பெயரில் சிறப்பு மின்னிதழ்

முன்னாள் குடியரசு  தலைவர் அப்துல் கலாம் பெயரில் ஃபேஸ்புக் தொடங்கப்பட்டு, அவரது தலைமையில் இதழ் தொடங் கப்பட்டுள்ளது. முன்பு இணையத்தில் வெளியாகி வந்த “பில்லியன் பீட்ஸ்’ என்ற இதழ் இனி ஃபேஸ்புக்கில் இடம் பெறும்.” “பில்லியன் பீட்ஸ் என்பது இணைய இதழ் ஆகும்.

இதில், நாட்டின் முன்னேற்றத்துக்காக அப்துல் கலாம் வெளியிட்ட சிந்தனைகள், கருத்துகள், பல்வேறு சாதனையாளர்களுடன் நடத்தி ய உரையாடல்கள் இடம்பெறும். அத்துடன், சாதனையாளர்களின் வெற்றி குறித்த படைப்புக ள், இந்தியாவின் மேம்பா ட்டுக்குப் பங்களிப்பு செலுத்திய சமகால இந்தி ய ப் பிரமுகர்களின் வெற் றி வாழ்க் கைச் சம்பவங்கள் இடம்பெறும்.

கலாமின் தொலைநோக் குச் சிந்தனையை முன் னெடுத்துச் செல்லும் நிறுவனங்களிலும் பல்வேறு ஆய்வு நிறுவன ங்களிலும் டாக்டர் கலாம் நிகழ்த்திய உரை , உரையாடல்கள் இந்த இதழில் இடம் பெறும்” என்று அப்துல் கலாமின் அறிவியல்-தொழில் நுட்ப ஆலோ சகர் வி. பொன்ராஜ் தெரிவித்தார். இவர் “பில்லியின் பீட்ஸ்’ ஃபேஸ் புக் இதழின் ஆசிரிய ராகவும் இருக்கிறார்.

அப்துல் கலாம் ஏற்கெனவே, இணையத் தில் இந்த இதழை நடத்தி வந்தார். அதில், அவரது உரைகள், மாணவர்கள், இளை ஞர்கள், கல்வியாளர்களுடன் நடத்திய கலந்துரையாடல் ஆகியவை இடம் பெற் றிருந்தன.””புதிய சிந்தனைகளை வெளிப் படுத்தும் இளைய தலைமுறைக்கு முழு அளவில் ஊக்கம் அளிக்கும் கருத்துகள், செய்திகள் வெளியிடப்படும்” என்றார் பொன்ராஜ்.

 இணையதள முகவரி www.abdulkalam.com, 

ஃபேஸ் புக் முகவரிwww.facebook.com/kalambillionbeats

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: