Tuesday, June 6அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

""என் வாழ்வில் இப்படி ஒரு பயத்தை சந்தித்தது கிடையாது"" – பீதியில் நடிகை காம்னா

தெலுங்கு, மலையாளம் திரைப்படங்ளிலும் தமிழில் மச்சக்காரன், இதயத்திருடன் உள்ளிட்ட படங்களி ல் நடித்த நடிகை காம்னா ஜெத்மலா னி மும்பையில் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் அந்தேரியி ல் உள்ள ஒரு திரையரங்கில் திரைப் படம் பார்த்து விட்டு, நள்ளிர‌வில் காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அந்த சமயத் தில் அவரது காரை, மர்ம கார் ஒன்று பின் தொ டர்ந்து வந்துள்ளது. அதில் இருந்தவ ர்கள், தங்களது காரை நடிகை காம் னாவின் காரை இடிப்பதுபோல் ஓட் டிச்சென்று அவரை ஆபாச வார்த்தைகளிலும் பேசியுள்ளனர். இதனா ல் பயந்து போன காம்னா காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். அப்ப‍டி இருந்தும் அந்த மர்ம நபர்கள், அவரை கேளிக் கிண்டலுடன் துரத்தி வந்துள்ளனர்.

சுமார் 40 நிமிடம் வரை அவரை பின் தொடர் ந்து வந்த அந்த மர்ம காரிடமிருந்து எப்ப‍டியோ இருந்து தப்பி த்து வீடு சேர்ந்துள்ளார் நடிகை காம் னா. பின் தான் குறித்து வைத்த‍ அந்த மர்ம காரின் நம்பரை குறிப்பிட்டு, மும்பை காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மும்பை காவல்துறையி னர் அந்த நபர்க ளை தேடிக்கண்டு பிடித்து ஈவ் டீசிங் வழக் கில் கைதுசெய்து சிறையி ல் அடைத்த‍னர்.

இதுகுறித்து காம்னா கூறியுள்ளதாவது, என் வாழ்வில் இப்படியொரு சம்பவம் நடந் தது இல்லை. எனது காரை எப்டியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று அந்த நபர் கள் முயற்சித்தனர். இருந்தும் நான் தப்பித் து விட்டேன். அந்த நேரத்தில் எனக்குள் ஏற்பட்ட பயத்தை வார்த்தை களால் சொல் ல தெரியவில்லை. என் வாழ்வில் இப்படி ஒரு பயத் தை சந்தித்தது கிடையாது.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: