இந்தியாவில் முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, தரையிலி ருந்து 700 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ள தரையில் இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி கொண்டது. ஒடி சாவின் பாலாச்சூர் ஏவு கணை தளத்திலிருந்து இந்த ஏவுகணை விண் ணில் வெற்றிகரமாக ஏவி பரிசசோதிக்கப்பட் டது. இன்று காலை 10.10 மணியளவில், பாலாச்சூர் ஏவுகணை ஏவும் தளத்தின் 4வது பிரிவிலிருந்து இந்த ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டதாக பாது
காப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த அக்னி 1 ஏவுகனை ,12 டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்டது. 1000 கிலோ வரையிலான எடையை தாங்க வல்லது என்று ம், இந்த வகை ஏவுகணை, இன் றைய சோதனை வெற்றிகரமாக முடிந்தைத அடுத்து இந்திய ராணுவத்தில் இடம் பெற்றுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள் ளது. இது இந்திய பாதுகாப்பு துறை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் திற்கு கூடுதல் மைல் கல்லாகும்.