இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்பது போலீஸ் உத்தரவு. ஆனால் அரியானா போலீசார் காரில் சென்றவரிடம் ஹெல்மட் அணியாதது ஏன் என்று கேட்டு அபராதம் விதித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.

சைனி சளைக்காமல் ஒவ்வொரு ஆவணமாக எடுத்து கொடுத்து போலீஸ்காரரின் வாயை அடைத்தார். கடைசியில் யோசித்த போலீ ஸ்காரர் திடீர் என்று ஏய் நீ ஹெல்மட் போடல, உன்னுடன் இருப்ப வரும் ஹெல்மட் போடல, ஆளுக்கு ரூ.100 கொடுக்க வேண்டும் என்றார். போலீஸ்காரரின் அறியாமையை நினைத்த வக்கீல் பணமெல்லாம் தர முடியாது என்று மறுத்தார். இதனால் கோபமான போலீஸ்காரர் அபராதம் கட்டு என்று கூறி செலானை கிழித்து கொடு த்தார்.
அதில் ஹெல்மட் அணியாமல் கார் ஓட்டினார் என்று குறிப்பிட்டு இருந்தார். அதை வாங்கிக் கொண்ட வக்கீல் அருகில் உள்ள போலீ ஸ் நிலையம் சென்று போலீஸ்காரர் கொடுத்த செலானை ரத்து செய்யுமாறு கூறினார். அங்கிருந்த அதிகாரிகள் எங்களுக்கு வேறு வேலை இருக்கிறது என்று மறுத்து விட்டனர். இதையடுத்து வக்கீல் சைனி, ஹிசார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மாஜிஸ்திரேட் அமித்கவுதம் மனுவை விசாரித்து சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது இ.பி.கோ. 166 (பொது ஊழியர் ஒருவர் சட்டத்தை மீறுதல்), 167 (தவறான காரணம் கூறி நடவடிக்கை எடுத்தல்), 193 (போலி ஆதாரம் காட்டுதல்), 506 (குற்ற நடவடிக்கையில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தர விட்டார். இதுபற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய பெண் அதிகாரி கீதிகாஜாகரிடம் கேட்டபோது, கோர்ட் உத்தரவு கிடைத்த தும் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார்.
news in malaimalar