திரையரங்கத்திற்கு வரும் மக்கள் தங்களது அன்றாட வேலைகளிலிருந்து, ஒரு மூன்று மணி நேரம் ஓய்வுக்காகவும், தங்களது துன்ப ங்களை மூன்று மணி நேரத்திற்கு மறக்கவும், வருகின்றனர். அப்படி படம் பார்ப்பவர்கள், தங்களது துன்பங்களை மறந்து, வயிறு வலிக் க சிரிக்க வைக்க வேண்டும் என்ற உயரிய எண்ண த்தில் அதிரடி நகைச்சுவையான கதையுடன் தயாரிக்கப்பட்டு வரும் திரைப்படம் புதுமுகங்க ள் தேவை.
இத்திரைப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள். முதல் கதாநாயகனாக சிங்க குட்டி திரைப்படத்தில் நடித்த சிவாஜி தேவ், இரண்டாவது கதா நாயகனாக ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் அறிமுகமாகிறார். இவர்களுக்கு ஜோடியாக பானு, விஷ்ணு ப்ரியாவும் நடிக்கின்ற னர். மேலும் இத் திரைப்படத்தில் ராஜ்கபூர், காதல் தண்டபாணி, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், கிரேன் மனோகர் ஆகியோரும் நடிக்கி றார் கள். எஸ்.ஏ.அபிமான் கதை – திரைக்கதை எழுத, கவிதா பாரதி வசனம் எழுதியிருக்கிறார். மனீஷ் பாபு இயக்குகிறார்.