Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அலர்ஜிக்கான அறிகுறிகள் என்ன?

சிலருக்குக் கத்தரிக்காய் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. சிலருக் கு தூசு ஆகாது. இப்படி நம்முடைய உடம்பு ஒரு சில விஷயங்களை ஏற்றுக்கொள்ளாது
 
இந்த ஒவ்வாமையைத்தான் ஆங் கிலத்தில் அலர்ஜி என்கிறோம். ஒருவருக்கு உடம்பு ஏற்றுக்கொ ள்கிற விஷயம் இன்னொருத்தரு க்கு அலர்ஜியாக இருக்கலாம். இது அவரவர் உடம்பைப் பொறுத் தது.
 
பலருக்கு மருந்தாக இருக்கிற `பென் சிலின்’ சிலருக்கு விஷமா கவே இருக்கிறது. பென்சிலின் ஊசி போடுவதற்கு முன்பு அலர்ஜி டெஸ்ட்டாக ஒரு `குட்டி ஊசி’ போ ட்ட செக் செய்வதைக் கவனித்திருப்பீர்கள். சரி, அலர்ஜிக்கான அறி குறிகள் என்ன? தொடர்ச்சியாகத் தும்மல் போடுவார்கள்.

மூக்கில் நீர் கொட்டும். நமைச்சல், மூக் கடைப்பு போன்றவை உண்டாகி, அதனா ல் வாச னை அறியும் திறன் குறையும். தலை வலிக்கும்.

இந்த அலர்ஜியானது நுனிமூக்கோடு நிற்காமல், சைனஸ் பிரச்சி னை. காதில் சீழ் வழிவது, தொண்டைப் புண் என்று மற்ற பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கு ம். மூக்கில் அலர்ஜி உண்டானால் மூக் கை கசக்கிக்கொண்டே இருப்பார் கள். ஒரு சிலர் மூக்கை உள்ளங் கையால் அழுத்தித் தேய்ப்பார்கள். இதை நாங்கள் செல்லமாக `அலர்ஜி சல்யூட்’ என்று சொல்வோம்.

அப்பாவுக்கோ, அம்மாவுக்கோ அலர்ஜி, எக்ஸிமா என்கிற தோல் வியாதி, ஆஸ்துமா இப்படி ஏதாவது இருந் தால் அது குழந்தைக்கு அலர்ஜியாக வர வாய்ப்பு இருக்கிறது. இது குழந்தைப் பரு வத்தில் தோல் சம்பந்தப்பட்ட அலர்ஜியா கவும் இளம் பருவத்தில் மூக்கு சம்பந்தப் பட்ட அலர்ஜியாகவும் வயதான பருவத்தில் ஆஸ்துமாவாகவும் வர வாய்ப்புகள் உண் டு .

சிலருக்கு ஏ.சி. அறைக்குள் நுழைந்தால் ஒப்புக்காது. தும்மல் போட்டு ரகளை பண் ணி விடுவார்கள். ஈரத்தன்மை கூட சிலரு க்கு அலர்ஜியை ஏற்படுத்துவது உண் டு. குறிப்பிட வேண்டிய இன்னொரு காரண ம்… தூசு! வீட்டில் ஒட்டடை அடிக்கும் போ தோ, பழைய பேப் பர்களைக் கையாளும் போதோ சிலருக்குத் தும் மல் வருவதைப் பார்த் திருப்பீர்கள்.

வீட்டில் வளர்க்கப்படுகிற நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, கோழி, வாத்து என மிருகங்கள், பறவைகள் மூலமாகவும் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. அலர்ஜி வருவதற்கான முக்கியமான வில்லன்களை உங்களு க்குத் தெரியுமா? மைட்ஸ்! நம்ம வீட்டு மெத்தை, தலையணைகளிலும் கார் பெட் களிலும் இவர்கள் கோடிக்கண க்கில் இருக் கிறார்கள்.

கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுண் ணியபூச்சிகள் இவை. துல்லியமாகச் சுத்தம் செய்த தலையணை ஒன்றில் சுமார் நாற்பதாயிரம் `மைட்ஸ்’ இருக் குமாம்! நம்முடைய தோலில் இருக்கு ம் இறந்த செல்கள்தான் இவற்றுக்குத் தீனி! இதன் மூலம்தான் பலருக்கு அலர்ஜி உண்டாகிறது.

சிலருக்கு உணவு அலர்ஜி வருவதுண்டு…வித்தியசமான் உணவுக ளை உண்பதினால் அவர்களு க்கு இவ்வாறு தும்மல் ஏற்ப டும்.

இதை விட வித்தியாசமான அலர்ஜி இருக்கிறது. இங்கி லாந்தில்  ஜுன் மாதத்திலிரு ந்து செப்டம்பர் வரை பூக்கள் பூக்கின்ற சமயம். அதிகளவி ல் மதுரந்தச்சேர்க் கை நடக் கும் என்பதால் காற்றிலேயே மகரந்தம் கலந்திருக்கும். அதை சுவா சிக்கும் பலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது. இந்த மகரந்த அலர்ஜியை `ஹே ஃபீவர்’ என்கி றார்கள்.

மே மாதம் வந்தால் போதும்… உஷாராக இந்த `ஹே ஃபீவரு’க் கான தடுப்பு ஊசிகளை அவர்கள் போட்டுக் கொண்டு விடுவார்க ள்! இந்த மகரந்த அலர்ஜியெல் லாம் ஒரு சீஸனில்தான் வரும். இந்த மாதிரி அலர்ஜியை சீஸன ல் அலர்ஜி என்றும், எப்போதும் இருக்கிற அலர்ஜி யை பெரினியல் அலர்ஜி என்றும் சொல்வார்கள்.

அலர்ஜி எதனால் ஏற்படுகிறது என்பதைச் சுலபமாகக் கண்டு பிடிக்க முடியும். டைரி ஒன்றை வைத்துக்கொண்டு, தும்மல், அரிப்பு, போன் ற அலர்ஜி அறிகுறிகள் ஏற்படும் போதெல்லாம் என்ன சாப்பிட்டீ ர்கள். அப்போதைய சூழ்நிலை, இருந்த இடம் போன்ற விவரங் களை எழுதி வரலாம்.

ஐந்து அல்லது ஆறு தடவை இப் படி எழுதிய குறிப்பை வைத்து, அதில் பொதுவாக உள்ள அம்ச ங்களை அலர்ஜிக்கான பொரு ள்களாக (அலர்ஜன்) தீர்மானிக் கலாம். அலர்ஜி பற்றி மட்டுமே கவனம் செலு த்துகிற `அலர்ஜி கிளி னிக்’குகள் இப்போது நிறைய வந்து விட்டன. இவர்களிடம் சென்றா ல் நமக்கு அலர்ஜி டெஸ்ட்… அதாவது அலர்ஜி உண்டாக்குகிற அலர்ஜன்’களை பட்டியல் போட்டு வைத்திருக்கிறா ர்கள்.

பேஷண்ட்டோடு பேசி ஒரு குறிப்பிட்ட அலர்ஜன் களை மட்டும் அவர் கை யில் `டெஸ்ட்டிங் டோஸ்’ ஆக ஊசி மூலம் செலுத் துவார்கள். அந்த இடத்தி ல் வீக்கம், அரிப்பு, சிவந்து விடுவது போன்ற ரியாக் ஷன்களை வைத்துச் சரி யான அலர்ஜனைக் கண்டுபிடிக்கிறார்கள்.

இந்த பேஷண்ட்டுக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிற அந்தப் பொருளை யே தான் மருந்தாகத் தருகிறார்கள். இதை `இம்யூனோ தெரபி’ என் பார்கள். அதாவது அலர்ஜியைத் தரக்கூடிய அந்தப் பொருளின் பவ ரை நூறாயிரம் மடங்கு குறைத்து அதிலிருந்து 0.1 மில்லியை வாரம் இரண்டு தடவை பேஷண்ட் உடம்பில் ஏற்றுகிறார்கள்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: