டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபர் ஒருவரை, உயிருடன் புலி
கடித்து தின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள து. டென்மார்க் தலைநகர் கோப ன்ஹேகனில் வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 150 ஆண்டுக்கு மேல் பழமையானது. இங்கு பல அரிய உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கூண்டி ல் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.

பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சி போட சென்ற போது, அங்கு 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் துண்டு துண்டாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவருடைய குரல்வளை, தொடை, முகம் போன்ற பகுதிகளில் புலிகள் கடித்து குதறியுள்ளன. மேலும் அந்த வாலிபரின் பெயர், அவர் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை.