Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இளம் பெண்கள் கேரளாவில் விற்பனை

கேரளாவில் இளம் பெண்கள் விற்பனை: விசாரணைக்கு உத்தரவு

கேரளாவில் தோட்டத் தொழி லாளர்களின் வறுமையை பய ன்படுத்தி, இளம் பெண்கள் கொ த்தடிமையாக வீட்டு வேலையி ல் ஈடுபடுத்தப்படுவதும், திரு மணம் என்ற பெயரில் விற்கப் படுவதும் வெளிச்சத்திற்கு வந்து ள்ளது.

கேரளா, பீர்மேடு தாலுகாவில் ஏராளமான தேயிலைத் தோட் டங்கள் உள்ளன. பல தோட்டங்கள் நஷ்டத்தால் முடங்கியுள்ளன. இதை நம்பி இருந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். வறு மையால், குழந்தைகள் படிப்பை தொடர முடியவில்லை. வண்டி பெரியார் பகுதியில் சீருடை வாங்க வசதியில் லாததால், பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொ ண்ட சம்பவம், இதற்கு உதாரணம். வேலை தேடி, ஏராளமானோர் வெளி மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள் ளனர்.

கொத்தடிமை: தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி, பாம்பனா ர், ஏலப்பாறை, வண்டிபெரியார் பகு திகளில் இளம் பெண்களை குறி வைத்து ஏஜன்ட்கள் செயல்படுகின் றனர். குடும்பத்தினருக்கு பண ஆசை காட்டி, பெண்களை, “வீட்டு வேலைக்கு’ என, வெளிமாநிலங்களுக்கு அனுப்புகின்றனர். பீர்மேடு தாலுகாவில் கடந்த ஆறு மாதங்களில் 12 க்கும் மேற்பட்ட பெண்கள் இதுபோல அனுப்பப்பட்டுள்ளனர். “மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பளம்; மாணவிக ளாக இருந்தால் தொடர்ந்து படிக்கலாம்’ எனக்கூறி அழைத்துச் செல்கின்றனர். இத ற்காக பெண்களின் பெற்றோருக்கு, 5000 ரூபாய் வரை கொடுக்கின்றனர். இதுபோல பல பெண்கள், தமிழக வீடுகளில் வேலை க்கு உள்ளனர். இதற்காக, ஏஜன்ட்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் வழங் கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் நடக்கும் கொடுமைகள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. தற்போது, பெரம்பலூர் தி. மு.க., மாஜி எம்.எல்.ஏ., ராஜ்குமார் வீட்டில் சிறுமி மேகலா,15, (பெயர் மாற்றப்பட்டுள் ளது) கற்பழித்து கொல்லப்பட்டதன் மூலம் “பெண் கொத்தடிமை’ முறை அம்பலமாகியுள்ளது.

பெண்கள் விற்பனை: மேகலாவின் சகோதரியும், ஈரோடு அருகே புதுக்குளம் பகுதியில் வயதானவரு க்கு திருமணம் செய்து வைக்கப்ப ட்டுள்ளார். “திருமணத்திற்கு பின் மக ளை பார்க்கக் கூடாது’ என, “ஒப்பந்தம்’ செய்யப்பட்டுள்ளது. இதற்காக பெற் றோருக்கு 50 ஆயிரம் ரூபாய் கொடு த்துள்ளனர்.பீர்மேடு பகுதியில் ஏரா ளமான இளம் பெண்கள் கடத்தப்பட் டுள்ளதாக, பிஜூமோள் எம்.எல்.ஏ., கேரள சட்டசபையில் பேசினார். இதன் படி, விரிவான விசாரணை நடத்த இடுக்கி எஸ்.பி., ஜார்ஜ்வர்க்கீஸ்க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

NEWS IN DINAMALAR

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: