Monday, January 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"கடன்" வாங்கலாமா? கூடாதா?

“கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது வெளியில் கடனே இல்லாவிட்டாலும் பெற்றக்கட ன், வளர்த்தக் கடன் பச்சையாகச் சொல்லப் போனால் மனைவி யிடம் படுத்தக் கடன் என்று ஏகப் பட்ட கடன்களோடு தான் வாழ்கி றோம், அது தவிர மிகவும் தே வையான வேலைகளில் கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்ப தும் வாடிக்கையான ஒன்றுதான் , கடன் வாங்குவது கேவலமான, மானக்கேடான பிழைப்பு இல்லை, ஆனால் அவற்றை முறையாக குறிப்பிட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் என்கிற நேர்மை இருக்க வேண்டும்,

இந்த நேர்மையை நம்பித்தான் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன, அவ்வாறு நேர்மை தவறியவர்களிடம் வசூலிக்க தான தண்டத்தையெல்லாம் பய ன்படுத்துகின்றன, அவர்களின் வழி முறைகள் தவறாக இருந் தாலும் கொடுத்த கடனை மீட்ப தற்கு அவர்கள் நேர்மையற்றவ ர்களை எதிர்நோக்க வேண்டியு ள்ளது என்ப தையும் கவனத்தில் கொள்ள வேண்டும்,” என்கிறா ர். அவர் சொன்னது சரியாக இரு ந்தாலும் – மனிதர்களால் சில விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது.

அவை என்னவென்று பார்ப்போம். என்னை பொறுத்தவரை கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. ஆனால் அப்படி வாழ முடியாத சூழலுக்கு நாம் தள்ளப் பட்டுவிட்டோம் என்பது ஒரு வருத்த மான உண்மை. சம்பாதித்து நமக்கு தேவையானதை வாங்கியது நம் தந்தையின் காலம். ஆனால் இன்று ஒரு பொருளை கடனுக்கு வாங்கி கொண்டு பிறகு சம்பாதித்து அடைக் க துவங்குகிறோம். இது யதார்த்த நிலை. கடன் யாரெல்லாம் வாங்க லாம், யாரெல்லாம் வாங்கக்கூடா து என்று பிரிக்கலாம்.

மனக்கட்டுப்பாடு உள்ளவர்கள் கடன் வாங்கலாம் தவறில்லை. எதி லும் நாணயமற்று முன், பின்னாக இருப்பவர்கள் கடன் வாங்கு வதை தவிர்ப்பது நன்று. ஆனால் தொழில் செய்ய கடன் வாங்குவது தவிர்க்க இயலாது. சுய தொழில் செய்ய கொ டுக்கும் அளவு எல்லோர் வீட்டிலும் நிதி நிலை இராது. இந்த பதிவு அவர் கள் குறித்தல்ல.”நாம் எந்த மாதிரி யான ரகத்தை சேர்ந்தவர்” என்பது நமக்கு நன்றாக தெரியும் தானே. எந் த ரகம் என்று பார்த்து கடன் வாங்கு வது நன்று.

பெரும்பாலும் “வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்ற எவரும் நினைப்பதில்லை” ஆனால் சூழ்நிலைகளே நம் நம்கத்தன்மையை சோதிக்கும். அந்த சூழ்நிலைகளை சாக் கு போக்கு சொல்லாமல் வென்று கட னை அடைப்பவர்கள் கடன் வாங்கலா ம். பத்தாயிரம் ரூபாய மாத வருமானம் பெறும் ஒருவர் – மாதா மாதம் இரண்டா யிரம் ரூபாய் கடனை அடைக்க ஒதுக்க வேண்டும் என்பது திட்டம். வீட்டு வாட கை, குடும்பச் செலவு என்று எல்லா செலவும் போய் மீத மாகும் இரண்டாயி ரத்தை கடன் அடைக்க வைத்து கொள் கிறார்.

எல்லா மாதங்களும் பிரச்சனைகள் வராமல், திட்டமிட்டப்படி இருக்க இயலாது. குடும்பத்தில் எதிர்பாரா மல் ஏற்படும் மருத்துவம் போ ன்ற திடீர் செலவுக்கு எதில் கைவைப் பார். வாடகை பணத்தை தொட முடியாது. வாடகை கொடுக்காமல் வீட்டில் இருக்கமுடியாது. கடன் பாக் கி கொடுக்க வேண்டிய பணத்தை எடுக்கலாம். பிறகு ஏதாவது சொல் லி சமாளிக்கலாம் என்று நினைக்க லாம். கடனை அடைக்க சாப்பிடாம ல் இருக்க முடியுமா என்கிற கேள்வி எழும். நிச்சயம் நேர்மையாளன் – சாப்பாட்டில் ஐம்பது சதவித செல வை குறைத்து கடனை கட்ட முயல் வான்.

கட்டுப்பாடில்லாதவர்கள், திட்டமி டல் இல்லாதவர்கள் வேறெங்கும் கடன் கிடைக்குமா என்று பார்ப் பார்கள். அப்படி ஒரு சிறு பள்ளத்தை மூட, இன்னொரு பெரிய பள்ளத் தை தோண்டி அந்த பள்ளத்திலிருந் து மீள முடியாமல் போன ஒருவ ரின் கதை இது. பதினைந்து வருஷ ம் முன்பு நடந்தது. அவர் முதலில் வாங்கியதென்னவோ ஆயிரம் ரூபாய்தான். “உங்களுக்கு தெரிஞ்சவர் தானே. அவர்க்கிட்ட ஒரு ஆயிரம் ரூபாய வாங்கி கொடுங்க” என்றார் நண்பர். பணம் தருபவரும் நண்பர் தான். ஆனால் அவர் வட்டிக் கு விட்டு சம்பாதிப்பவர் இல்லை. ரெ ம்பவும் தெரிந்தவர்களுக்கு மட்டும் கொடுப்பார்.

இருவருமே நண்பர்கள் என்பதால் – இரண்டு பேரிடமும் நல்ல பிள்ளை என்று பேர் வாங்க வேண்டுமே என் று சிபாரிசு செய்தேன். ஆயிரம் ரூபா ய்க்கு எண்ணூத்தி ஐம்பது ரூபாய் கொடுப்பார்கள். தினசரி பத்து ரூபாய் கொடுக்க வேண்டும் நூறு நாளைக்கு. “நீங்க தான் பொறுப்பு. நீங்களே ரூபாயை வாங்கி வைச்சுகங்க. நா வாரத்துக்கு நாலு நாள் ஊருல இருக்க மாட்டேன்” என்றார். நம் முன்னிலையில் பணத்தை பெற்று கொ ண்டார். பணம் வாங்கிய நண்பரின் குண ம் பற்றி பத்து நாளில் தெரிந்துவிட்டது. “இவர் கடனுக்கு சரிப்பட்டு வர மாட்டார்” என்று. பணம் ஒழுங்காக தருவதில்லை. பணம் கொடுத்த நண்பரும் சற்று அஜாக் கிரதை குணம் கொண்டவர். “முன்ன பின் ன கொடுத்ததை கண்டு கொள்ளவில் லை”

பணம்கொடுத்த எழுபது நாளில், எழுநூறு ரூபாய்க்கு – ஐநூறு ரூபாய்தான் கொடுத் திருந்தார். பணம் கொடுத்த நண்பர் “அவர் இப்ப ரெண்டாயிரம் கேட்கிறார். முதல் தடவை கொடுத்த பணத்தை கழிச்சிட்டு கொடுக்க சொல்றார். கொ டுக்கலாமா” என்று கேட்டார். அதாவது ஆயிரம் ரூபாய் என்ற சின்ன கடனை அடைக்க அவ ரிடமே இரண்டாயி ரம் ரூபாய் கேட்கிறார் .”கொடுக்கலாமா, வே ண்டாமான்னு என்கிட் ட யோசனை கேட்டீங்க ன்னா – கொடுக்க வே ண்டாம்னு தான் சொல் வேன். அதே சமயம் நீங் களா விருப்பப்பட்டு கொடுக்கிற தா இருந்தா கொடுங்க. நா ஜாமீன் கிடையாது” என்றே ன்.

 “பரவாயில்லே. அப்புராணி யா தானே இருக்கார். நானே கொடுத்துகிறேன். ஆனா ரூபாயை மட்டும் நீங்க வா ங்கி வைங்க. நான் இந்த பக் கம் வரும்போது வாங்கிக்கு வேன்” என்றார். இரண்டாயி ரம் ரூபாய் கொடுக்கப்பட்டது. ஆனால் பணம் வாங்கியவர் – தினசரி என்னிடம் தர வேண் டிய ரூபாயை தராமல் “அவர்க்கிட்ட எதுக்குங்க நான் தரணும். உங்க க்கிட்ட தானே வாங்கினேன். உங்கக்கிட்டயே தரேன்” என்றாராம். காரணம் கோபம். பணம் கொடுக்க முட்டுக்கட்டை போட்டதால். பணம் கொடுத்தவரிடமும் சரி, பணம் வாங்கியவரிடமும் சரி – அவர்கள் கொடுக்கல் வாங்கல்க ளை தெரிந்து கொள்ள விரும்ப வில்லை.

சரியாக ஒரு வருஷம் கழித்து என்னை தேடி வந்தார்கள் – பஞ்சாயத் துக்கு. ஆயிரம் ரூபாயில் துவங்கிய கடன் – ஒரு வருஷத்தில் இருப தாயிரம் என்கிற அளவு வளர்ந்திருந்தது. 1000 ரூபாயை அடைக்க 2000 வாங்கியவர் பிறகு அதை அடைக்க 5000 வாங்குகிறார். பிறகு 10,000, கடைசியாய் 20,000 வாங்கி கட்ட முடியாம ல் விழிக்க – கணக்கு போட்டு அவர் சொன்ன தொகையை தர முடியாது என்று இவர் மறுக்க – கடைசியில் அடிதடி. பணம் வா ங்கியவர் “நீங்க தான் கணக்கு சரியா சொல்வீங்க” என்று சொ ல்ல – பணம் கொடுத்தவரோ “அவர் பணமே தராதீங்கன்னு. நான் தான் வீம்பா கொடுத்தேன்” என் றார்.

கடைசியில் பணம் வாங்கியவர் ஊரை விட்டே போய்விட்டார். அவர் சிறு தொழில் செய்தார். தொழில் முதலீடாக பெற்ற தொகையை குடும்ப செலவு செய்ததன் விளை வே – இந்த நிலை. நிச்சயம் கடன் வாங்குவது விளையாட்டல்ல. நிச்சயம் கடன் வாங்கியவர்கள தங்க ள் வாழ்க்கையை பிரிக்க வேண்டும். கடன் வாங்குவதற்கு முன், வாங்கியதற்கு பின் என்று. கடன் வாங்கியதற்குபின் நம்மை ஒரள வேணும் மாற்றி கொள்ள வேண்டும். முக்கியமாய் -கடன் வாங்குவதற்குமுன் நாம் அதீத செல வாளியாக இருந்தால் – கடன் வாங்கியதற்குபின் அதை மாற்றிகொ ள்ள வேண்டும்.

நம் அரசுகளை போல கடனை வாங்கி ஆக்கப்பூர்வமான வேலைக ளை செய்யாமல் இலவசங்களுக்கு ஒதுக்குவது போல – கடனை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு செய்யாமல் விட்டால் கடன் நம்மை அழித்து விடும் என்பதே கசப்பான உண்மை. 

நன்றி – ஓசை

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: