Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெற்றிலை – சுபிட்சத்தின் அடையாளம்

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனை த்திலும்   முக்கிய   இடம்    வகிப்பது      வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பி க்கப்படுகிறது. தேவி யின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண் மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தி யின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண் மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாதது போல் வெற்றிலை யின்றி வழி பாடு இல்லை.

திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என் கிறார்கள். வெற்றி லை பாக்கு கொடுத்து விட் டால் அது தாம்பூல சத்தியம்.பிறகு அதை யாரும் மீறத்துணியமாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த் தம் செய்யும்போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம் கொடுப்பவர் கள் வெற்றிலை பாக்கின் மீது உத்திரணியால் நீர்வார்த்துக் கொடுப் பது வழக்கம். வட இந்தியாவி லும் இந்த வழக்கம்பரவலாக இருக்கிறது. வடநாட்டவர்கள், தீபாவ ளியன்று லக்ஷ்மிபூஜை செய்யும் போது மூன்று வெற்றிலையை யும், மூன்று பாக்கையும் பூசாரி எடுத்து வைப்பார். லக்ஷ்மி, சர ஸ்வதி, துர்க்காவை இது குறி க்குமாம். மாங்கல்ய தாரணம் முடிந்ததும் வந்தோரனை வரும் வாழ்த்தி விட்டு விருந்து ண்டு விட்டுப் புறப்படுகையில் முகூர்த்த வெற்றிலைபாக்கு கொடுக்காமல் அனுப்ப மாட்டா ர்கள். திருமணத்தின்போது கணவன் மனைவி இருவருக்கும் பெண் ணின் சகோதரன் தாம்பூலம் மடித்துக் கொடுப்பது ஒரு சம்பிரதாயம். நலங்கின்போதும், முதல் இரவின் போதும் வெற்றிலை பாக்குக்கு முக்கிய இடம் உண்டு.

கம்பராமாயணத்தில் ஒரு உருக்கமா னகட்டம். ராவணனால் சிறை எடுக் கப்பட்ட சீதை. இளம் வெற்றிலையை யார் மடித்து வாயில் போட, ராமன் உண்பான் என்று வருந்தினாளாம்.

மகாபாரதத்தில் தருமன் ராஜசூய யாகம் நடத்திய போது முதல் தாம் பூலத்தை கண்ணன் பெற்றுக் கொண்டான் என்று சொல்கிறது. திவ்ய பிரபந்தத்தில் உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றி லை எல்லாம் எம் பெருமான் என்றென்றேகண்களில் நீர் மல்கி என்று மனம் உருகிப் பாடுகிறார் நம்மாழ்வார்.காளமேகப்புலவர் ஆதி நாளில் திருவானைக்காகோயிலில் பரிசாரகராக இருந்தாராம். அங்கே தாசியாக இருந்த மோகனாங்கி என்பவளின் அழகில் மயங்கி, ஒருநாள், கோயில் பிரகாரத்திலேயே அவள் வருகைக்காக காத்திரு ந்த நிலையில் கண்ணயர்ந்தார். நள்ளிரவில் அகிலாண்ட நாயகி அம்ம ன் அவர்முன் தோன்றி, தன் வாயில் இருந்த தாம்பூல த்தை அவர் வாயில் உமிழ்ந் தாளாம், அவர் அதைச் சுவைக்க, தெய்வப் பிரசாதமான தாம்பூலம் நாவில் பட்டதும் நாவன்மை பெற்ற காள மேகம், ஆசு கவி பாடுவதில் வல்லவரானாராம். இதுபோன்றே, கூத்தனூரில் தேவி சரஸ்வதி தன் வாய்த்தாம் பூலத்தின்சாறை அளித்து ஒட்டக் கூத்தரை கவி வித்தகர் ஆக்கிய தாகவும் ஒரு வரலாறு உண்டு. வெற்றிலையை வாடவிடுவது வீட்டுக்கு சுபமல்ல என்பது நம்பிக்கை. வெற்றிலை பாக்கை எப்போதும் வலது கை யால் தான் வாங்க வேண்டும். மகிமை மிக்கதும், மங்கள கரமானது மான வெற்றிலை, சுபிட்சத்தின் அடையாளமாகவே கருதப்படு கிறது.

thanks to vasuki

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: