வீட்டின் முன்புற சுவர்க ளிலும், போர்டிகோவிலு ம் முல்லை, மல்லி என மலர் கொடி தாவரங்க ளை வளர்த்து வீட்டிற்கு அழகூட்டுவார்கள். இவை பற்றிப் படர்ந்து நறுமணம் மிக்க பூக்க ளை பூத்து வீட்டிற்கு வரு பவர்களை வாசனையால் வரவேற்கும். அதேபோல் வளைவுகளிலு ம், வேலி ஓரங்களிலும் வளர்ப்பதற்கு அலங்கார கொடி வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் வகைகளைப் பற்றியும் கொடி களை பயிரிடுவதற்கான பருவநிலைப் பற்றியும் ஆலோசனை கூறு கின்றனர் தோட்டக் கலைத்துறை அதிகாரிகள்.
அடினோகேளிமா (பூண்டு கொடி)
பசுமையான இலைகளைக் கொண்ட வெண்மை கலந்த சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு கொடி அக்டோபர் – பிப்ரவரி மாதங்க ளில் பூக்கும். விண்பதியம் மூலம் பயிர்ப் பெருக்கம் செய்யலாம்.
செங்காந்தள் மலர்
தமிழ்நாட்டின் தேசிய மலர் எனப்ப டும் செங்காந்தள் மலர்கள் பிரிந்த நிலையில் அழகிய சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது நலிவான கிளைகளையுடைய கொடி வகை ஆகும்.
ஹோம்ஸ்க்கியான்டியா
வளைவாகப்படரும் கொடி குளிர்காலங்களில் பச்சை சிவப்பு நிற பூக்களைத் தரும்.
ரயில்வே கொடி (ஐப்போமியா)
ஊதா நிறப்பூக்களை உடையது. நீண்ட காலத்திற்கு பூக்கும் தன் மையுடையது.
ஜாக்மோன்ஷியா
வயலட் நிறத்தில் பூக்கள் மிகவும் அடர்த்தியாக பூக்கும் தன்மை பெற்றது. சற்றே நிழலில் உள்ள இடங்களுக்கேற்றது.
ஆண்டி கோனான் லெப்டோப்பஸ் இரயில் பூ
கிழங்கு வகை கொடியாகும், பூக்கள் சிவப்பு நிறமாகவும் தேனீக்க ளை கவரும் கொடியாகும்.
அலமாண்டா
மெல்லிய கிளைகளை உடைய து. பூக்கள் மஞ்சள் நிறத்தில் மழைக் காலங்களில் பூக்கும் தன்மை உடையது
அஸ்பராகஸ் ப்ளுமோசஸ்
சிறகு போன்ற இலையுடைய கொடி வகையாகும். விதை மூலம் பயிர்பெருக்கம்.
பிக்னோனியா வெனுஸ்டா
இலையுதிர் கொடி வகை ஆகும். பூக்கள் அடர் ஆரஞ்சு நிறத்தில் தொங்கிய வண்ணமிருக்கும். மெதுவாக வளரும் கொடிகள். பதியன் மூலம் பயிர்பெருக்கம்.
சங்குப்பூ
விதை மூலம் பயிர்பெருக்கம்,தொட்டியில் வளர் க்க ஏற்றவை. வெள்ளை மற்றும் ஊதா நிறப் பூக்கள்
பெட்ரியா
கொடி அடர்த்தியாக வளரும். மலர்கள் நீல நிறத்தில் கொத்து கொத்தாக இருக்கும். பிப்ரவரி – நவம்பர் வரை பூக்கும்.
வெர்னோனியா
இந்த தாவரங்களை நிழல் பந்தல் கள் , அலங்கார குடைகள் , நடை பாதை பந்தல்கள் ஆகியவற்றில் படர விட்டு நல்ல நிழல் பெறலாம்.
தாட்பூட் பழக்கொடி
பெரிய இலைகளுடன் அடர்த்தியாக வளரும் கொடியினை பந்தல் , வேலி முதலிய இடங்களில் படரவிட்டு வள ர்க்கலாம். வெள்ளை நிறத்தில் கவர்ச்சியான பெரிய பூக்கள் தோன் றும்.
ஆஸ்திரேலிய பைன் ஆப்பிள் (மான்ஸ்டீரியா)
பெரிய மரங்களில் படரவிட ஏற்ற கொடி. இலைகள் பெரியதாக அழகாக இருக்கும். தொட்டிகளில் நட்டு வீட்டின் உட்புற அலங்காரத் திற்கும் உபயோகப்படுத்தலாம்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.