மலையாள முன்னணி நடிகையான நவ்யா நாயர் தமிழில் அழகிய
தீயே, மாய கண்ணாடி உள்பட சிலர் படங் களில் நடித்தார்.கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு அவர் சினிமாவை விட்டு ஒது ங்கி இருந்தார்.
கேரள மாநிலம் கொச்சி அம்பலக்காடு பகுதியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த நவ்யா நாயரை படங்களில் மீண்டும் நடிக்க வைக்க மலையாள படத் தயாரிப்பாளர்கள் முயன்றனர். ஆனால் அவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந் தார்.
இதனிடையே பிரபல மலையாள இயக்கு னர் சைஜுஅந்திக்காடு இயக்கும் ‘நம்மோட வீடு’ என்ற படத்தில் மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். இப்
பட த்தின் படப்பிடிப்பு கொல்லம், ஒற்றை பாலம் பகுதியில் நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் தனது 1 1/2 வயது மகன் சாய்கிருஷ்ணாவுடன் காணப்பட் ட நவ்யாநாயர் தான் நடிக்க வேண்டிய காட்சிகள் குறித்து உதவி இயக்குனர்க ளுடன் விவாதித்து கொண்டு இருந் தார். மீண்டும் நடிக்க வந்தது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண் ணம் எனக்கு கிடையாது. குழந்தை ம ற்றும் கணவருடன் சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி வருகிறேன். பல படங்களை தவிர்த்து வந்த நிலையில் நம்மோட வீடு படத்தி
ன் கதையை இயக்குன ர் சைஜுஅந்திகாடு கூறி யபோது, எனது கணவ ருக்கு கதை பிடித்து போனது. அவர் விரும் பியதால் தான் இப்பட த்தில் நடிக்கிறேன்.
தொடர்ந்து படங்களி ல் நடிப்பது குறித்து கணவர்தான் முடிவு செய்ய வேண்டும். இப்போ தைய எனது உலகம் எல்லாமே கணவரும், குழந்தையும்தான் இவ் வாறு அவர் கூறினார்.
news in malaimalar