Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குடியரசுத்தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14-வது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடை பெறும். குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாள ரை அறிவிப்பது முதல் அவருக்கு ஆதரவு திரட்டுவது வரை பல் வேறு சர்ச்சைகள், சலசலப்பு கள் எழுந்த நிலையில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன் றைய தலைவர் தேர்தல் நடை பெறுகிறது. காங்கிரஸ் கட்சி யின் வேட்பாளர் பிரணப் முகர்ஜியை, தே.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., கட்சிகள் ஆதரவுடன் எதிர்த்துப் போட்டியிடுகிறார் பி.ஏ.சங்மா.

எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்திலும், எம்.எல்.ஏ.,க்கள் சட்ட சபை களிலும் தங்கள் வாக்குகளை பதிவு செய்கின்றனர். இந்தியா முழு வதும் மொத்தம் 776 எம்.பி.,க் களும், 4 ஆயிரத்து 120 எம்.எல். ஏ.,க்களும் வாக்களிக்க உள்ளனர். இதில், 77 எம்.பி.,க்கள் அவர்கள் விரும்பிய மாநிலங்களில் வாக் களிக்க அனுமதி வழங்கப்பட்டுள் ளது. இதுபோல், 8 எம்.எல்.ஏ .,க்கள் நாடாளுமன்றத்தில் வாக்க ளிக்க அனுமதி பெற்று ள்ளனர்.

22ம் தேதி முடிவு : இந்த தேர்தல் முடிவுகள் வரும் 22-ம் தேதி அதி காரப் பூர்வமாக அறிவிக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னிறுத்தப்பட்டுள்ள பிரணப் முகர்ஜிக்கும், பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் சங்மாவுக்கும் இடையே கடும் போ ட்டி உள்ளது. இந்த தேர்தலில் கட்சி கொறடா கட்டளை பிறப்பிக்க முடியாது என்றும், அது எம்.பி. மற்று ம் எம்.எல்.ஏ.,க்களை கட்டுப்படுத் தாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

எம்.எல்.ஏ. ஓட்டுக்கு மதிப்பு எவ்வ ளவு? குடியரசுத் தலைவர் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளிக்கும் வாக்குகள், மொத்தம் 5 லட்சத்து 49 ஆயிரத்து 474 வாக்கு மதிப்புகளாக கணக்கில் கொள்ளப் படும். மக்கள் தொகையைப் பொறுத்து அந்தந்த மாநில எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் வாக்குகளுக்கு மதிப்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கடந்த 1971ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் படி, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை மற்றும் அவர்கள் அளிக்கும் வாக்குகளின் மதிப்பு விபரம் பின் வருமாறு : இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை யைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில், சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டவர்க ளின் வாக்கிற்கு அதிகபட்சமாக 208 மதிப் புகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி, அம்மாநிலத்தில் உள்ள 403 எம்.எல்.ஏ.க்களின் மொத்த வாக்கு மதிப்பு 83 ஆயிரத்து 824.

இதற்கு அடுத்தபடியாக, தமிழகம் மற் றும் ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ. க்களின் வாக்குகளுக்கு 176 மதிப்புகள் அளிக் கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 234 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள், 41 ஆயிரத்து 184 மதிப்புகளாக கணக்கி ல் கொள்ளப்படும்.

இதேபோல், ஜார்க்கண்டில் உள்ள 81 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள், 14 ஆயிரத்து 256 ஆக எடுத்துக் கொள்ளப் படும். மஹாராஷ்டிராவில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் வாக்கிற்கு 175 மதிப்புகள் வழங்கப் பட்டுள்ளது. அதன்படி, 288 உறுப்பினர்களின் மொத்த வாக்குகள், 50 ஆயிரத்து 400 மதிப்புகளாக கணக்கில் கொள்ளப்படும்.

கேரள எம்.எல்.ஏ.க்களின் வாக்கிற்கு 152 மதிப்புகள் கிடைக்கும். அந்த மாநிலத்தில் உள்ள 140 எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள், 21,280 மதிப்புகளாக  எடுத்துக் கொள்ளப்படும்.

மேற்கு வங்கத்தில் ஒரு எம். எல்.ஏ. அளிக்கும் வாக்கிற்கு, 151 மதிப்பு கள் அளிக்கப்படும். அதன்படி, மொத்தமுள்ள 294 உறுப்பினர்களுக்கு 44 ஆயிரத் து 394 மதிப்புகள் கிடைக்கும். ஒடிசாவில், ஒரு எம்.எல்.ஏ. வி ன் வாக்கிற்கு 149 மதிப்புகள் வழங்கப்படுவதால், அங்குள் ள 147 உறுப்பினர்களின் வாக் குகள், 21 ஆயிரத்து 903 வாக்குகளாக கணக்கில் கொள்ளப்படும். ஆந்திராவில் ஒரு எம்.எல்.ஏ.க்களுக்கு 148 வாக்கு மதிப்பு வழங்கப் படுவதால், அங்குள்ள 294 உறுப்பினர்களுக்கு ஒட்டு மொத் தமாக 43 ஆயிரத்து 512 மதிப்புகள் கிடைக்கும்.

குஜராத் எம்.எல்.ஏ.வின் வாக்கிற்கு 147 மதிப்புகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் அங்குள்ள 182 எம்.எல்.ஏ.க்கள் அளிக்கும் வாக்கு களுக்கு, 26 ஆயிரத்து 754 மதிப்புகள் கிடைக்கும். கர்நாடகா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள எம். எல். ஏ.க்களின் வாக்குகளுக்கு 131 மதிப் புகள் வழங்கப்படும். அந்த வகையில் கர்நாடகாவில் உள்ள 224 எம்.எல். ஏ.க்களின் வாக்குகள், 29 ஆயிரத்து 344 மதிப்புகளாகவும், மத்திய பிரதே சத்தில் உள்ள 230 எம்.எல் .ஏ.க்களின் வாக்குகள், 30 ஆயிரத்து 130 மதிப்புகளாகவும் கணக்கில் கொள் ளப்படும். ராஜஸ்தான் எம்.எல்.ஏ.வின் ஒரு வாக்கிற்கு 129 மதிப்புகள் வழங்கப்படுவதால், அம்மாநிலத்தில் உள்ள 200 உறுப்பினர்களின் வாக்குகள் 25 ஆயிரத்து 800 மதிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படும்.

ம்மு காஷ்மீரில் ஒரு எம்.எல். ஏ.வின் வாக்கிற்கு 72 மதிப்பு கள் கிடைக்கும்
என்பதால், அங் குள்ள 87 உறுப்பினர்களுக்கு 6 ஆயிரத்து 264 வாக்கு மதிப்புக ள் கொடுக்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்களில் அஸ்ஸாம் எம்.எல்.ஏ.வுக்கு மட் டுமே அதிக வாக்கு மதிப்பு உள் ளது. அங்கு ஒரு உறுப்பினரின் வாக்கு, 116 மதிப்புகளாக எடுத்துக் கொள்ளப்படுவதால், மொத்தமு ள்ள 126 எம்.எல்.ஏ.க்களுக்கும் சேர்த்து 14 ஆயிரத்து 616 வாக்கு மதிப்புகள் கிடைக்கும். நாகாலந்தில் உள்ள ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கிற்கு 9 மதிப்புகள் மட்டுமே வழங்கப்படுவதால், அங்குள்ள 60 உறுப்பினர்க ளுக்கு 540 வாக்கு மதிப்புகளே கிடைக்கும். மிசோரம், அருணாச்சலில் எம்.எல்.ஏ.க்களின் வாக்கிற்கு 8 மதிப்புகளே கிடை க்கும். அந்த வகையில் அருணாச்சலத்திற்கு 480 வாக்கு மதிப்பும், மிசோரமிற்கு 320 வாக்கு மதிப்பும் மட்டுமே இருக்கிறது.

தலைநகர் டெல்லியில் 70 எம்.எல்.ஏ.க்களுக்கும் தலா 58 மதிப்புக ள் என்ற அடிப்படையில், மொத்தம் 4 ஆயிரத்து 60 வாக்கு மதிப்புகள் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

செய்தி – புதிய தலைமுறை

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: