Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"இங்கப் படுக்கணும்னா நாலணா கொடு"! கவியரசு கண்ண‍தாசனை மிரட்டிய காவல்துறை

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமி ன்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலை க்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடு திக்குப் போக வேண்டும். இரவு மண்ண‌டி வரை நடந்து போக முடி யாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அப்பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கி றார் கண்ணதாசன்.

அவர் வளர்ந்து கவியரசாகி “சுமை தாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர் ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு . ஆனால் படத்தில் இரவு ஏழுமணி மாதி ரி இருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்கவைத்து மாறிமா றி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். தன வீட்டி ல் உள்ளவர்களிடம் இப்படத்தைப் பார் த்து கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா..? “இந்தக் கார்களை கவனி த்தீர்களா? இவை எல்லாமே நம்மு டைய கார்கள். வாழ முடியும் என்று நம்பிக் கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்று போலீஸ் நடக்க விட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத் திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம்.

அந்தப் பாடலை நீங்களும் வீடியோவில் காணுங்கள் 

மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்…

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்

கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது மகன் காந்தி கண்ணதாசன் சொன்ன செய்தி து

“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் “என எழுதிய கண்ணதாச னின் இதயச் சுரங்கத்துள்தான் எத்தனை கேள்வி…?

நன்றி – முகநூல்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: