Sunday, October 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எல்.ஐ.சி. கட்டிட விரிசலுக்கு காரணம் . . .

எல்.ஐ.சி. கட்டிட விரிசலுக்கு மெட்ரோ ரெயில் பணி காரண ம் அல்ல: ஆய்வு செய்த அதிகாரிகள் தகவல்

சென்னையின் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மெட் ரோ ரெயில் திட்டப்பணிகள்  வேகமாக நடந்து வருகிறது. இதில் அண்ணா சாலையில் எல்.ஐ.சி. கட்டிடம் அருகே பூமி க்கு அடியில் மெட்ரோ சுரங்க ரெயில் நிலையம்  அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ராட்சத எந்திரங்களை கொண்டு 23 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் 14 மாடிகளை கொண்ட எல்.ஐ.சி. கட்டிடத்தில் 11-வது மற்றும் 12-வது மாடி கட்டிடத்தில் வெளிப்பகுதியில் லேசான விரிசல் ஏற் பட்டிருந்ததை கண்காணிப்பு அதிகாரிக ள் கண்டுபிடித் தனர். இதுபற்றி    எல்.ஐ. சி. நிறுவன பொறியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பார்வையி ட்டு மெட்ரோ ரெயில் திட்ட அதிகாரிக ளை அழைத்து வந்து காண்பித்தனர். 

இதையடுத்து மெட்ரோ ரெயில்வே  பொறியாளர்களும், எல்.ஐ.சி. நிறுவன பொறியாளர்களும் கூட்டாக சேர்ந்து கட்டிடத்தின் அனைத்து மாடிகளிலும் அதன் உறுதி தன்மை குறித்து ஆய்வு நட த்தினர். இதுகுறித்து மும்பையில் இருந்து வந்த எல்.ஐ.சி. நிறுவன பொறியியல் பிரிவு செயல் இயக்குனர் அமீத்யாதவ் கூறுகையில் மெட்ரோ ரெயில் திட்ட பணி நடப்பதால் தான்  விரிசல் ஏற்பட் டுள்ள தாக கருதுகிறோம். இது குறித்து  ஆய்வு நடத்தி தகுந்த முன் ஏற்பாடு நடவடிக்கை மேற் கொள்ள மெட்ரோ அதிகாரிக ளை  கேட்டிருக்கிறோம் என்றா ர். 

இந்நிலையில் மெட்ரோ ரெயில் வே தலைமை பொது மேலாளர் (கட்டிடம்) சோம சுந்தரம் கட்டிட விரிசலை பொறியாளர்களுடன் சென்று இன்று பார்வையிட்டார். அவர் கூறியதாவது:- 

சென்னையில் அண்ணாசாலை, கீழ்ப்பாக்கம், கோயம்பேடு அசோக் நகர், சைதாப்பேட்டை, நந்தன ம், ஆகிய பகுதிகளில் மெட் ரோ ரெயில் பணி    நடக்கிறது. அங்கெல்லாம் எல்.ஐ.சி. கட்டி டத்தை விட உயரமான கட் டிடங்கள் உள்ளன. அங்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. என வே எல்.ஐ.சி.யில் ஏற்பட்ட விரிசலுக்கு மெட்ரோ ரெயில் பணி காரணம் அல்ல. பாது காப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் நடக்கிறது. 

இந்த விரிசல் ஏற்பட்ட தற்கான காரணத்தை அறிய ஐ.ஐ.டி, வல்லுனர் குழுவும் ஆராய்ந்து வருகின்றனர். நாங்கள் ஆய்வு செய்து பார்த்ததில்  மெட்ரோ பணியில் கட்டிட விரிசல் ஏற்பட வில்லை என்று தெரிய வந்துள் ளதால் அந்த பகுதியில் மெட் ரோ ரெயில் பணிகள் தொடர்ந் து நடைபெற்று வருகிறது. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி பணிகள் நடப்பதால் கட்டிடங்களுக்கு எந்த பிரச்சினையும்  வராது.  இவ்வாறு அவர் கூறினார்.

news in malaimalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: