சவூதி பெண்கள் தங்கள் கணவருக்கு தம்மடிக்கும் பழக்கம் இருந் தால் அவரை தாராளமாக விவாக ரத்து செய்யலாம் என்று அந்நாட்டு நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சவூதி அரேபிய நீதிமன் ற நீதிபதி இப்ராஹிம் அரபு மொழி நாளிதழலான அல்வாதானுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவ து,
ஒரு பெண் திருமணமான பிறகு தனது கணவனுக்கு புகைப்பிடிக்கு ம் பழக்கம் இருப்பதை கண்டுபிடித்து, அதனால் தனக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், அதனால் தான் அவருடன் இனியும் சேர்ந்து வாழ விரும்பவில்லை இல்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அவருக் கு கண்டிப்பாக விவாகரத்து கொடுக்க வேண்டும். ஆனால் திருமணத்திற்கு முன்பே அவரு க்கு புகைப் பிடிக்கும் பழக்கம் இருப்பதை தெரிந்து மணக்கும் பெண்களுக்கு இது பொருந்தா து.
மேலும் அந்த பெண் தனது கணவருடன் எத்தனை ஆண்டுகள் வாழ் ந்துள்ளார் என்பதை கணக்கில் கொண்டு தான் விவாகரத்து வழங்க வேண்டும். உதார ணமாக ஒரு பெண் புகைப்பிடிக்கும் பழக்கமுள்ள கணவருடன் 20 ஆண்டுகள் வாழ்ந்தபின் விவாகரத்து கேட்டால் அந்த வழக்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என் றார்.
சவூதி அரேபியாவில் 600, 000 பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 772,000 இளம்வயதினருக்கு புகைப்பி டிக்கும் பழக்கம் உள்ளது என் று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக அளவில் சிகரெட் இறக்குமதி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியா 4வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Ok