Friday, October 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"மலையாள திரை உலகில் பாட்டுகள் பாடி நடித்து புகழ் பெற்றவள் நான்" – காவ்யா மாதவன்

மலையாள திரை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து ரசிகர் களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வருபவர் காவ்யா மாதவ ன். இவர் தற்போது சினிமாவுக் கு பாட்டு எழுதியும், பாடியும், அவரே இசையும் அமைத்து உள் ள பாடல்கள் விரைவில் வெளி வர உள்ளது. 

பாட்டெழுதி, இசை அமைத்து, பாடிய அனுபவம் குறித்து காவ் யா மாதவனிடம் கேட்டபோது, மனம் திறந்து பதில் அளித்தார். அதன் தொகுப்பு இதோ.   

நான் பாட்டெழுதுவது அதிசயம் அல்ல. எனது வரிகளை கவிதை என நான் நினைப்பது இல்லை. நான் வரிகளை பாட்டுகளாகதான் நினைக்கிறேன். எனது பாட்டுகள் ரசிகர்களை கவரும் எனவும் நான் நினைக்கவில்லை. 

பாட்டெழுதி எனக்கு பெரிய அனுபவம் இல் லை. ஆனால் எனக்கு பாட்டெழுத வேண்டும் என்று ஆசை இருந்தது. அதில் பிறந்தது தான் எனது பாட்டுகள். சினிமாவிற்கு கதை, வசனம் எழுத ஆசை இருந்தும் அந்த துறைக்கு நான் செல்ல விரும்பவில்லை. 

நான் 9ம் வகுப்பு படிக்கும்போது முதல் பாட்டு எழுதினேன். நான் இது வரை 8 பாட்டுகள் எழு தி உள்ளேன். எனது பெயரில் பாடல்கள் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்டேன். அது இப் போது நிறைவேற உள் ளது. 

எனக்கு அறிமுகமான ஒரு நபரின் மரணம் தான் முதல் பாட்டெழுத காரணம். 8 பாட்டில் ஒரு பாட்டை நான் சொ ந்தமாக பாடி உள்ளேன். ‘உள்ளே அடங்கி விடுமோ எனக்காக பூத்த பூவே’ பாடலை ஜோன் ஸன் பாடி உள்ளார். ‘என்னை தெரிந்த தா கிரு ஷ்ணா’ என்ற பாடலை சித்ரா அக்கா பாடி உள்ளார். 

நான் 8-ம் வகுப்பு வரை சாஸ்திர சங்கீதம் படித்து உள்ளேன். நான் படி த்தபோது பாட்டு எழுத காரணம் பள்ளிகளில் நடைபெ றும் கலை நிகழ்ச்சிகளில் கலந் து கொள்ளவே. பள்ளி நாட்களி ல் தினமும் கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பழக் கம். 

எனது இளம் வயதில் கண்ணாடி முன் னால் நின்று பாடுவது எனக்கு பிடிக்கு ம். எனது பாட்டுகள் கொஞ்சல் ரகத்தை சேர்ந்தது ஆகும். எனது பாட்டுகளை சுஜாதா அக்கா பாடி உள்ளார். அவர் எனது பாட்டுகளை சந்தோஷத்துடன் பாடிக் கொடுத்தார். 

மலையாள திரை உலகில் பாட்டுகள் பாடி நடித்து புகழ் பெற்றவள் நான். ‘வெ ண்ணிலா சந்தன கிண்ணம்’ பாட்டு மிக பிரபலம் அடையு ம். எனக்கு பிடித்த பாடல்கள் உள்ள சினிமா மீசை மாதவன் ஆகும். நல்ல பாட்டுகளில் நடித்தது நான் செய்த தவம் ஆகும். 

தற்போது எனது 8 பாட்டுகள் வெளி வருகிறது. அது மிகவும் பிரபலம் அடையும் என நம்புகிறேன். எனது பாட்டின் சி.டி. வெளியீட்டு விழா எர்ணாகு ளத்தில் வரு கிற 23-ந்தேதி நடைபெறுகிறது. சி.டி .யை நடிகர்  மம்முட்டி வெளியிடுகிறார்.

thanks to malaiamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: