Wednesday, June 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக நடிகர் சிவா

 

1981-ல் ரிலீசான சூப்பர் ஹிட் திரைப்படமான‌ தில்லு முல்லுவில் சூப்ப‍ர் ஸ்டார் ரஜினி கதாநாயகனாக வும், நடிகை மாதவி கதாநாயகியாகவு ம்  நடித்திருந்தனர். மேலும் தேங்காய் சீனிவாசன், நாகேஷ், சவுகார் ஜானகி, பூர்ணம் விஸ்வநாதன், விஜி, குண்டு கல்யாணம் ஆகியோரும் நடித்திருந்த னர். பாலச்சந்தர் இயக்கத்தில் கலகலப் பான காமெடி கலந்த திரைப்பட மாக ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இத் திரைப்படத்தில் இடம் பெற்ற “ராகங்கள் பதினாறு உருவான வர லாறு”, “தில்லு முல்லு தில்லுமுல்லு”, “தங்கங்க ளே தம்பிகளே” ஆகிய‌ பாடல்கள் பட்டி தொட் டியெ ங்கும் கலக்கியதோடு இன்றுவரை அனைவரது நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பிடித்திருக் கிறது. தமிழ்ப்படம் மூலம் கதாநாய கனாக அறிமுகமான சிவா, சமீபத்தில் ரிலீசா ன கலகலப்பு பட த்திலும் நடித்துள்ளார்.  இவர் தற்போது ரஜினியின் தில்லுமுல்லு படம் ரீமேகில் ரஜினி வேடத்தில் சிவா நடிக்கிறார். சிவாவிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:- தில்லு முல்லு ரீமேக்கில் நான் நடிக்கப்போவ து உண்மைதான். சூப்பர் ஸ்டார் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வந்த பிரமாதமான படம் இது. இதில் நடிக்கப்போவது திரில் லிங்கா க உள்ளது என்றார்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: