Friday, September 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மருத்துவ காப்பீடு "பிரீமியம்' தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ள து. இது, அரசு ஊழியர்கள் மத்தியி ல், பெரும் அதிர்ச்சியையும், அதிருப் தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக் கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படு கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, “ஸ்டார் ஹெல்த் இன்சூரன் ஸ்’ நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப்பட்டு இருந்தது. காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறு ம், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது. இதன் மூலம், ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது. தற்போது, அரசு ஊழியர்க ளுக்கான மருத்துவ இன் சூரன்ஸ் செய்ய, பல்வேறு நிறுவனங்களில் மாநில அரசு டெண்டர் கோரியது. அதன் அடிப்படையில், “யுனைடெட் இந்தியா இன் சூரன்ஸ்’ நிறுவனத்துக்கு, அனுமதி வழங்கப்பட்டுள் ளது. காப்பீட்டுத் தொகை, இரண்டு முதல், நான்கு லட்சம் ரூபாய் என, உயர்த்தப் பட்டு உள்ளது.

கூடுதல் சிகிச்சை: முந்தைய காப்பீ ட்டு நடைமுறைகளிலிருந்து, கூடுத லாக சிகிச்சை மற்றும் கூடுதலாக புதிய மருத்துவமனைகள், இத்திட்டத் தில் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகை யில், 54 வகையான நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சையும்; ஏழு வகை யான அறுவை சிகிச்சைகளும் மேற் கொள்ளலாம். இதற்கான மாத பிரீமி யம், 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.ஜூலை 2012 முதல், ஜூன் 2016ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு, பாலிசி அம லில் இருக்கும். இதற்காக, இம்மாதம் முதல், அரசு ஊழியர் சம்பள த்தில், 150 ரூபாய் கட்டாயம் பிடித்தம் செய்யவும், அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டு ள்ளது. அரசின் இந்த உத்தரவு, அரசு ஊழியர் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்தி உள்ளது.

ஆறு மடங்கு: அரசு ஊழியர் சங்கத்தி னர் கூறியதாவது:காப்பீட்டுத் தொகை, இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ள து. ஆனால், அதற்கேற்ப பிரீமியத்தொ கை, 25ல் இருந்து, 50 அல்லது 75 ரூபாயாக உயர்த்தி இருக்கலாம். ஆனால், அதை ஆறு மடங்கு உயர்த்தி உள்ளனர். தற்போது பிடித்தம் செய்யும் 150 ரூபாயிலும், குறிப்பிட்ட தொகையை அரசு பிடித்தம் செய்து கொண்டுதான், காப் பீட்டு நிறுவனத்துக்கு செலுத்த உள்ளது. புதிய மருத்துவமனை, கூடு தல் சிகிச்சை என்றெல்லாம் காரணம் தெரிவித்தாலும், அதிக பட்ச மாக, 50 சதவீதம் பேர் கூட, பயன் பெறு வதில்லை.இவ்வாறு அவர் கள் தெரிவித்தனர்.

news in dinamalar

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: