Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் (22/07): என் கணவனை, இன்னுமே பழி வாங்க விரும்புகிறேன்…'

அன்புள்ள சகோதரிக்கு,

எனக்கு வயது 55, அதனால், தங்களை சகோதரி என்றழைக்கிறேன். 17 வயதில் (1970) அம்மாவின் கட்டாயத்தால், தாய் மாமனுக்கே கட்டி வைத்தனர். எனக்குத் துளியும் விருப்பமில்லை. அப் போது அவருக்கு வயது 32. காரணம், நான் அழகாய் இருப் பேன், மற்றவர்களும் கூறினர். ஆனால், அவரோ பார்க்க சகிக் காது.

என் புருஷன் ஒரு ஆசிரியர், பொறுப்பில்லாத ஆசிரியர். சூதாடி, அப்பாவின் சம்பாத்திய த்தை எல்லாம் சூதாடி அழித் தார். கடனாளியாகி வி.ஆர். எஸ்., வாங்கினார்.

எனக்கு இரண்டு பெண்கள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இரு பெண்களையும், எந்த செலவும் இல்லாமல், என் சூழ்நிலையை அறி ந்து, என் தம்பிகள் மணமுடித்துக் கொண்டனர்.

பிடிக்காத புருஷன், பிள்ளைகள் மட்டும் எப்படி? நதிமூலம், ரிஷி மூலம்போல, பிள்ளைகள் மூலத்தையும் பெண்களிடம் கேட்கக் கூ டாது. எனக்கு எப்பவும், என் அழகைப் பற்றிய சிந்தனை தான். எந்த அழகான, ஆண்களை பார்த்தாலும், வாலிபர்களை பார்த்தாலும், கற்பனையில், என்னை அவர்களிடம் இழந்து விடுவேன்.

ஆனால், உண்மையிலேயே என் புருஷனின், ஒன்றுவிட்ட அண்ண னிடம், என்னை முழுமையாக கொடுத்து விட்டேன். 20 ஆண்டுகளா க, என் புருஷனை ஏமாற்றிக் கொண்டிருந்தேன். ஆனால், இந்த விஷ யம், அவருக்குத் தெரியும் போல் இருக்கிறது.

கடந்த, 92ல் வி.ஆர்.எஸ்., வாங்கி விட்டார். அவருடைய வருமானத் தில், கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு இருப்பேன். 20 ஆண்டுகளாக பேச்சு வார்த்தை கிடையாது. நான், என் மகள்கள் கிட்ட இருக்கேன். அவர் அனாதையா, பென்ஷனை வைத்து, ஊர் ஊரா அலையறார்.

என்னுடைய கேள்வி, நான் அவருக்குப் பண்ணின துரோகம், ஏமா ற்றினது, எதுவுமே எனக்கு, எந்த மன உறுத்தலையும்  தரவில்லை, உங்களின் ஆலோசனை, அவர் இறந்த பின் (72 வயது), அவருடைய பென்ஷன் பணத்தை வாங்க, எனக்கு தகுதியிருக்கா என்பது பற்றித் தான். தங்களின் ஆலோசனையை வேண்டுகிறேன்.

இப்படிக்கு, அன்பு சகோதரி.

அன்புள்ள சகோதரிக்கு—

உங்கள் கடிதம் கிடைத்தது. கடிதம் முழுக்க, அதிர வைக்கும் ஒப்பு தல் வாக்கு மூலங்கள் நிறைந்துள்ளன.

உங்களின் கடிதத்தை படித்து முடித்ததும், உங்களின் மேல் முழு அளவில் கோபம் வந்தது. 55 வயதாகியும், செய்த தவறுகளிலிருந்து திருந்தி விடுபட்டு, இறைவனிடம் பாவமன்னிப்பு இறைஞ்ச வில்லை யே நீங்கள், என பதறினேன். ஆயிரம் ஆண்கள் கிரிமினல்தனம் செய் தால், பத்து பெண்கள், பதிலுக்கு கிரிமினல்தனம் செய்து, கிரிமினல் ஆண்களுடன் போட்டியிடு கின்றனர் என்பது, உங்கள் நடவடிக்கைக ளை வைத்து நிரூபணம் ஆகிறது.

உங்களிரு மகள்களை, தாய் மாமன்களுக்கு தானே கட்டி வைத்து ள்ளீர்கள். அந்த ஜோடிகளுக்கும் வயது வித்தியாசம் அதிகம் இருக் கத்தானே செய்யும். அதனால், திருமணத்தில் அதிருப்தி கொண்டு, உங்களது மகள்கள் தவறான நடத்தைக்கு தாவினால், பொறுத்துக் கொள்வீர்களா?

உங்களது மகள்களும், மகனும் உங்களின் மேல் உண்மையான அன் பைக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். அசூயையும், அருவெறுப்புமே கொண்டிருப்பர். உறவுக்காரர் களும், நட்பு வட்டமு ம் கூட, உங்களின் மேல் நல்ல அபிப்ராயம் கொண்டிருக்க மாட்டா ர்கள்.

மீதமுள்ள வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்க பாருங்கள் சகோதரி. கணவனின் ஒன்றுவிட்ட அண்ணனுடனான தொடர்பை, மறுபரிசீல னை செய்து, துண்டித்து விடுங்கள்.

நாடோடியாக சுற்றிக் கொண்டிருக்கும் கணவருடன் சேர்ந்து வாழப் பாருங்கள். பரஸ்பரம் செய்த தவறுகளை மன்னித்து, புதுவாழ்க்கை புகுங்கள். அழகு நிலையில்லாதது; அன்பு நிலையானது. தாய் மாம னிடம் அன்பை நிலை நாட்டுங்கள். கணவனுடன் சேர்ந்து வாழ்ந்த பின், ஓய்வூதிய பணத்தின் மீதான உரிமையைக் கோரலாம்.

“என் தவறுகளை ஒப்பி வருந்த மாட்டேன்… இன்னும் எனக்கு, என் கள்ளக்காதலனின் துணை தேவை. என் கணவனை, இன்னுமே பழி வாங்க விரும்புகிறேன்…’ என்ற எண்ணத்தோடு நீங்கள் இருந்தால், கணவனின் மரணத்திற்கு பின்னான, ஓய்வூதியத்துக்கு உரிமை கோ ராதீர்கள்.

மனித வாழ்வின் தத்துவார்த்தம் தெரியாமல் இருக்கிறீர்கள் சகோ தரி. உங்கள் கணவருக்கு முன், நீங்கள் இறக்க நேரலாம் அல்லது உங்களின் கள்ளக்காதலன் இறக்க நேரலாம். உங்களது மரணத்தி ற்கு பின், ஒரு பத்து பதினைந்து ஆண்டுகள், உங்களது கணவர் ஒரு உபயோகரமான வாழ்வு வாழ்ந்துவிட்டு போகலாம்; யார் கண்டது?

எல்லாம் வல்ல இறைவன், உங்களுக்கு நல்லறிவைத் தர பிரார்த்தி க்கிறேன்.

—என்றென்றும்  தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.
(தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்
விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply