Friday, April 10அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

"நானும் எனது இறப்புக்கு பின் உடல் உறுப்புகளை தானம் செய்வேன்" – நடிகர் மோகன்லால்

 

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நடிகர் மோகன்லா லின் தாயார் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார். இதைத் தொடர்ந்து தனது தாயாருடன் இருந்து கவனித்து வரும் நடி கர் மோகன்லால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிக ளையும் சந்தித்து பேசினார். அப்போது கொச்சியை அடுத்துள்ள குற்றியரையை சேர்ந்த சுவாதி கிருஷ்ணா என்ற பெண் ணுக்கு இருதய மாற்று அறுவை சிகி ச்சை நடந்தது.
 
தற்போது சுவாதி கிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை சந்தித்து ஆறுதல் கூறிய மோகன்லால் இருதயநோயா ல் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வரு ம் இன்னொரு பெண்ணான கிருஷ்ண ன் குட்டியின் மனைவி ரெய்னியையு ம் சந்தித்தார்.
 
அப்போது ரெய்னிக்கு அவர் ஆறுதல் கூறி உற்சாகப்படுத்தினார்.
 
தொடர்ந்து நிருபர்களிடம் நடிகர் மோகன்லால் கூறியதாவது:-
 
உடல் உறுப்பு தானம் என்பது மகத்துவ மானதாகும். ஒருவர் இறந்துபோன பி ன்பு அழியும் உடல் உறுப்புகளை இன் னொருவர் உயிர்வாழ தானம் செய்யும் குணம் கொண்டவர்கள் புண்ணியவா ன்கள். இன்று மருத்துவத் துறையில் அறிவியலின் முன்னேற்றத்தால் உட ல் உறுப்பு தானம் முதல் உயிர் வாழ்வ தற்கு தேவையான என்னென்ன நடவ டிக்கைகள் எடுக்க வேண்டுமோ? அவை அனைத்தையும் மருத்துவ ர்கள் தாங்கள் முயற்சியால் மேற் கொள்கிறார்கள்.
 
இந்த ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எனது தாயார் சிகிச்சை பெற்று வருகிறார். அவரு டன் சிகிச்சை பெறும் பலரையும் பார் த்தேன். ஒவ்வொருவரிடமும் உயிர் வாழ்வதற்கான வேட்கை உள்ளது. இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுவாதி என்ற பெண் உற்சாகமாக காணப்படுகிறார்.
 
அவருக்கு இருதயம் தானம் செய்த பெண், கடவுளால் ஆசீர்வாதிக்கப் பட்டவர். நானும் எனது இறப்புக்கு பின்பு கண், சிறுநீரகம், இருதயம் போன்ற உடல் உறுப்புகளை தானம் செய்வேன். இதற்கான உறுதி மொழி பத்திரத்தை விரைவில் எழுத உள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
thanks to maalaimalar

 

Leave a Reply