Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

‘நான் தப்பு பண்ணிட்டேன். தெரியாம செய்திட்டேன். மன்னிச்சுடு. – (பெருந்தலைவர் காமராஜர் சொன்ன‍து)

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம். நேற்று திருச்சி வேலுசாமி அவர்கள் எழுதிவரும் ஒரு புதிய புத்தகத்தை தொகுக்கும் வேலையில் இருந்தேன். அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின் றி தவித்தேன்…

அப்போது காமராஜர் முதல்வர். பழை ய சட்டமன்ற விடுதியில் மண் ணாங் கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழிய ராக இருந்தார். சட்டமன்ற ஊறப்பினர் கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒரு முறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறேன்.

குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் முக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந் தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டு தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்தது ம் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும் னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ் வளவு நேரமா என்று எகிறினார் மாயாண்டி தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ருபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரிய மா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி….

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந் தது. அந்த உத்தரவை படித்து காட் டச் சொல்லி வீட்டில் அழுது புரண் டு கதறினார். ’அரசாங்க உத்தியோ கத்தில் எழதப்படிக்கத் தெரியாத வர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காம ராஜர் போட்ட உத்தரவு தான் அந்த கடிதம். 2  நாள் கழித்து பழைய சட்ட மன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடி வந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்து ப் பிடித்தவராக அழுகி றார். ஏதாவது சமாதானம் சொல்லனு மே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறி விட்டு காத்திருக்க வேண
்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறு முனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக் கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தி ல் இருந்து

யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல் வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாரு ங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில் லை….

அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்து விட் டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங் கட்டி. உங்களை கை யோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசி யிருப்பது முதல்வரிடம்  என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங் கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என் று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமரா ஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள ஷோ பாவில், கண்ணத்தில் கைவைத் தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கா ர்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங் கட்டி முதலில் நுழைய அதி காரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண் டார்கள். நீங்க தான் மண்ணாங்கட்டி யா…என்கிறார். ஆமாங்க ஐயா. நான்

தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதி காரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா… வாண்னேன். வந்து பக்கதில உட்காருங்கன்னேன் என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற் றுப் பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துகும் பிட்டு நான் தப்பு பண்ணிட்டேன். தெரி யாம செய்திட்டேன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச் சே… ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லி யாமே.

சமைக்கலயாமே…. உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க … எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ் சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்க கூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந் திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது

தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவுசொல்ல மண்ணாங் கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை…

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப் பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிக ளை பார்த்து ‘இவரை அழைத்துக்கொண்டு போங்க. வேலை கொடு த்தாச்சு. இனி கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தை ங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிற கென்ன நினைத்தாரோ சற்று தயங்கி’போகிறபோது வெறு ம் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப் பாடு வாங்கிட்டு போய் கொ டுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்கமாட் டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்ட படியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியு ம். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, எழைகளுக்காகவே இருந்தா ர்..

நன்றி – தமிழால் இணைவோம், முகநூல்

6 Comments

 • அன்பு நண்பரே காமாஜரைப் பற்றி எழுதி கதி கலங்க வைத்து விட்டீர்கள்.
  இந்த சம்பவத்தை கேள்வி பட்டு இருக்கிறேன்.ஆனால் இவ்வளவு முழுமையாக இப்போதுதான் தெிந்து கொண்டேன்.
  நான் காமராஜர் இருக்கும்போது நான் மிக அருகில் சந்தித்து பேசியவன்.அப்பொழுது என்னை படிக்கத்தான் சொன்னார்
  இது போன்ற விசயங்களைத் தாருங்கள்.இதுவரை நான் படித்த அனைத்து பிளாக்குத் தகவல்களில் இதுதான் என்னனை நெகிழச் செய்தது.
  வாழ்க வளமுடன்.
  snr.DEVADASS.

 • raja

  படிக்கும் போதே கண்களின் வழியே கண்ணீர் கன்னத்தை நனைத்தன!
  நெஞ்சில் பிசைவதுப் போன்ற வலி!
  இரும்பு இதயமும் இளகிடும் இதைப் படிக்கும் போது!
  காலத்தால் போற்றிக் காக்கக் கூடிய உயர்ந்த செய்தி!
  எனது சிறு வயதில் திரு. காமராஜரை மிக மிக் அருகில் நின்று பார்த்திருக்கிறேன் புதுச்சேரியில்,
  ஆனால், அப்போதெல்லாம் அவரின் பெருமையை அறியா பருவம்!
  அவரோடு புதுச்சேரியின் தந்தை திரு. குபேர் அவர்கள் புஸ்ஸி வீதியில் உள்ள ஒரு பெட்டிக் கடையின் முன் நின்று பேசிக் கொண்டு இருந்தார்கள்.
  அங்கே என்னோடு கூட இன்னும் சில சிறுவர்களும் இருந்தோம்.
  குபேர் அவர்கள் சட்டைப் பையில் சில்லரைக் காசுக்கள் இருக்கும், அவரை பப்பா! பப்பா! என்று கூப்பிட்டு கையை நீட்டினால் காசு தருவார்,
  அப்படியே எல்லோரும் கூப்பிட அவர் காசுகளை எடுத்து தந்தார்.
  எண்ணித் தர மாட்டார், அள்ளிக் கொடுப்பார்,
  யாருக்கு எவ்வளவு என்றெல்லாம் கிடையாது.
  இன்றும் பல நேரங்களில் அந்த நினைவுகளை நான் அசை போடுவது உண்டு!
  இப்போதுப் போல் அன்று அவரின் பெருமையை உணர்ந்திருந்தால் அவரை கையெடுத்துக் வணங்கி இருப்பேன்!
  திரு. காமராஜரைப் போன்ற நல் இதயங்களை நான் இன்று வரைக் கண்டதே இல்லை!
  இனியும் காண்பேனா என்பது சந்தேகமே!!
  அவர் ஏழைகளின் தலைவன் இல்லை,
  அவர் ஏழைகளின் இதயம் அன்றிலிருந்து இன்றல்ல என்றுமே!!!!!
  அந்த அருமையான பாக்கியம் இப்போது எனக்குக் கிடைக்காவிட்டாலும், இந்த கருத்து மூலம் நெகிழ்ந்து அவரை வணங்குகிறேன்.

 • SENTHILKUMAR

  EZAIYIN SIRIPPIL IRAIVANAI KANDA UNMAYANA ARASIYAL THALAIVAR ELIMAYIN ILAKKANAM ,THAVARAI ETTRUKOLLUM THAIYIRIYAM UNAMYANA TAMILINA THALAIVAR KARMA VEERAR KAMARAJ-THE GREAT
  THALAI VANANGUGIROM

 • காமராஜரைப் பற்றி இந்தக் கால இளைஞா்கள் இத்தனை பேர் தெரிந்து தங்களது பிளாக்கில் பகிர்ந்துகொளவதைப் படித்தால் எனக்கு இந்தியாவின் மீது உள்ள நம்பிக்கை அதிகமாகிறது..இளைஞா்கள் அனைவரும் நீரு புத்த நெருப்பாக இருக்கிறார்கள். அந்த நெருப்பை ஊத ஒரு விவேகானந்தருக்காக காத்திருக்கிறார்கள் என்பதும் புரிகிறது.
  வாழ்க வளமுடன்.
  snr.DEVADASS

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: