மழைத்துளிகள் என்றாலே ஒருவித பரசவம் மனதில் எழுவது இயல் பு. இயற்கை அன்னையின் அந்த சவரில் (shower) குளிக்க விரும் பாத உயிரினங்களே இருக்க முடியாது எனலாம்.
அந்த மழைத்துளிகள், வளிமண் டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக்குறைவால்.. தூசித்துணி க்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும் போது நீர்த்துளி களாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பூமியை நோக்கி விழு கின்றன.
அவ்வாறு விழும் நீர்த்துளிகள் கோளமாக வெவ்வேறு அளவுகளில்
இருப்பதை கூர்ந்து அவதானித் தால் மட்டுமே காணலாம். ஏன் அவை அப்படி இருக்கின்றன என் பதை விஞ்ஞானிகளும் ஆராயத் தவற வில்லை.
வளிமண்டலத்தில் உள்ள காற்றி ன் கூறுகள் மழைத்துளிகளின் பூமி நோக்கிய இயக்கத்தை எதிர்ப் பதால் மழைத்துளிகளுக்கும் காற் றுத் துணிக்கைகளுக்குமிடையே உராய்வு உருவாகி ஒன்றின் பய ணத்தை மற்றையது இடையூறு செய்ய முற்படுவதால் அந்த உராய் வைக் குறைக்கும் நோக்கோடு மழைத்துளிகள் சாத்தியமான சிறிய
மேற் பரப்பை உருவாக்கும் வகையில் கோள அமைப்பைப் பெறுவ தாகவும் இதற்கு நீரின் மேற்பரப்பு இழுவிசை (Surface tension) உதவுவதாக விஞ்ஞா னிகள் கண்டறிந்தனர்.
அப்போ ஏன் மழைத்துளிகள் ஒரு சீராக இன்றி வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன என்று கேட்டால் அதற்கு மழை த்துளிகள் விழும் போது ஒன்றை ஒன்று முட்டி மோதி சேர்வதும் பிரிவதும் நிகழ்வதால் அவற்றின் பருமன் மாறுபடுகின்றன என்றும் கூறினர் விஞ்ஞானிகள்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.
உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
அறிந்து கொண்டேன்.. நன்றி …