Tuesday, October 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பணக்கார இளைஞர்களை மணம் முடிப்பது எப்படி?

பணக்காரர்களை கவர்ந்து திருமணம் செய்து கொள்வது குறித்து சீன ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.சீனாவின் சிச்சுவான் மாகாண த்தின் செங்டு நகரை சேர்ந்தவர் சூ பி, 42. இவர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு, பெரிய செல்வந் தரை திருமணம் செய்து கொண்டார். பணக்காரர் களை கவர்ந்து, அவர்களை திருமணம் செய்து கொள்வது தொடர்பான வகுப்பை கடந்த ஏழாண் டுகளாக சூ பி நடத்தி வருகிறார். இவருடைய வகு ப்பில் படித்த 100க்கும் அதிகமான பெண்கள் இந்த பாடத்தால் பயன் அடைந்துள்ளனர்.

“பணக்கார வாலிபரை சந்திக்கும்முன் அவருடைய பழக்க வழக்கங் களை தெரிந்து வைத்திருக்க வேண் டும். அவர் அடிக்கடி எங்கு செல்கிறா ர் என்பதையும் அறிந்திருக்க வேண் டும். அவர் செல்லும் இடத்துக்கு நீங் கள் சென்று தற்செயலாக அவரை சந்தித்தது போல பாசாங்கு செய்ய வேண்டும். அவருடைய பழக்கத்தை யும் நீங்கள் பின்பற்ற வேண்டும். எடுத்த எடுப்பில் ஆடம்பரமான உண வுக் கெல்லாம் ஆர்டர் செய்யக்கூடாது. நீங்கள் பழகும் நபர் கொடுக் கும் அன்பளிப்புகளை வாங்கி கொள்ளலாம். முதல் இரண்டு மாத ங்களுக்கு அவருடன் மிகவும் நெருங்கி பழகக்கூடாது. ஓராண்டுக் குள் அவரை திருமணம் செய்து கொள்ள அவசரப்படக்கூடாது. இர ண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் உங்களை மணப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை என்றால் நீங்கள் அவருடைய மனைவியாக முடியா து’ என் கிறார், இந்த வினோத ஆசிரியை.

(நாளேடு ஒன்றில் வெளியான செய்தி)

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: