Saturday, October 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஹெட்செட் – பயன்பாடுகளும், முக்கிய குறிப்புகளும்

போனுடன் இணைக்கப்படும் ஹெட்செட்கள் தொலைதொடர்பு செயல் பாட்டில் பல பயன்களைத் தருகின் றன. மொபைல் போனுடன் இவை இணை க்கப்படுகையில் இவை தரும் வசதிகள் பல நோக்கில் உள்ளன. (பெர்சனல் கம்ப் யூட்டர் மற்றும் லேண்ட்லைன் போன்களு டனும் ஹெட்செட்களை இணைந்து செயல் படுத்தலாம்.)

1. எந்த வகையான போனுடனும் ஹெட் செட் இணைக்கப்படுகையில், நம் கை கள் சுதந்திரமாகச் செயல்படும் நிலை யைப் பெறுகின்றன. கார் ஓட்டலாம்; கம்ப் யூட்டர் இயக்கலாம்; போனில் வரும் செய் திகளைக் குறித்து வைக்கலாம். இவ்வா று பணியாற்றும் இடத்தில் நம் திறனை முழுமையாகப் பயன்படுத்த நமக்கு ஹெட்செட்கள் உதவுகின்றன.

2. சரியான முறையில் அமர்ந்து செயல்பட நமக்கு ஹெட்செட்கள் உதவுகின்றன. மொபைல் போனை தோளுக்கும் சாய்ந்த தலைக்கும் இடையே வைத்துக்கொண்டு, பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் மாதிரி நடக்க வேண்டியதில்லை. மேலும் இவற்றைத் தொங்க விடு வதனால் டேபிளில் இடம் பிடிக்காது. தற்போ தைய வயர்லெஸ் ஹெட் செட்களில் இந்த பிரச்னைக்கு இடமே இல்லை.

3. பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஹெட் செட் இணைக்கப்படுகையில், இன்ட ர்நெட்டில் இன்னொரு முனையில் இருப்பவருடன் பேசிட மிக உதவியா ய் உள்ளது. போனில் விளையாடு கையிலும் இது ஒரு நல்ல அனுபவத்தினைத் தருகிறது.

இதனை வாங்குகையில் சில அம்சங்களைப் பார்த்து வாங்க வேண் டும்.

1.முதலாவதாக கிடைக்கும் ஒலி யின் தன்மை தொலைதொடர்பு கொள்வதுதான் நம் முக்கிய நோ க்கமாக இருப்பதால் ஹெட்செட் தரும் வாய்ஸ் துல்லிதமாக இருக் க வேண்டும். இதற்காக சற்று கூடு தலாகப் பணம் செலவழித்தாலும் பரவாயில்லை.

2. மைக்ரோபோனின் தன்மை: பேசுவது எப்படி கேட்கப்பட வேண் டுமோ அதேபோல நாம் பேசுவத னையும் துல்லிதமாகக் கிரஹித்து அனுப்பும் மைக்ரோபோன் ஹெட் செட்டில் இருக்க வேண்டும். மேலும் நம் வாய் அருகே தான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் ஹெட்செட்டை மாட்டிய நிலையில் நம் வாய்ஸ் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும்.

3. காதில் அல்லது தலையி ல் சரியாக பொருந்தி இரு க்க வேண்டும். சில ஹெட் செட்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் தான் தலையில் மாட்ட முடியும். அப்படி இல்லாமல் யாருடைய தலையிலும் பொருந் தும் படி இருக்க வேண்டும்.

4. இத்துறையில் நல்ல அனுபவம் பெற்ற நிறுவனங்களின் ஹெட் செட்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. மலிவான விலை யில் கிடைக்கும் ஹெட்செட்கள் நாளடைவில் அதனை இணைக்கு வயர்களில் பிரச்னை ஏற்பட்டு இயங்காமல் போய்விடலாம்.

 thanks to mytamilpeople

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: