சமீபத்தில் வெளியான தமிழ்த்திரைப்படங்களில் சற்று வித்தியாச மான கதை அம்சத்துடனும், வலிமையான திரைக்கதையுடனும், நகைச்சுவை ரசனையும் கொண்ட ‘நான் ஈ’ படம் வசூலை வாரிக்குவித் து வருவ தோடுமட்டுமல்லாமல் தெலுங்கிலும் மெகா ஹிட்டாகியு ள்ளது. இந்நிலையில் இயக் குநர் ராஜ மௌலி இப்படத் தை இந்தியில் 3டியில் ரீமேக் செய்ய திட்டமிட்டு ள்ளதாக தெரிகிறது.
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் கதா நாயகனை தேர்ந்தெடுக்க இப்பட த்தை அபிஷேக் பச்சனிடம் திரையிட்டு காட்டியு ள்ளார் ராஜ மௌலி. இந்த படத்தை கண்டுகளி த்த அபிஷேக் பச்சானுக்கு இது பிடித்து விட்டால் அவரே நான் ஈ கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரி வித்துள்ளதால் அவரை நடிக்க வைக்கவும் திட்டமிட்டுள்ளதாக ராஜ மௌலி கூறியுள்ளார். அதேசமயம் தமிழில் வில்லனாக நடித்த சுதீப்பும், ஹீரோயினாக நடித்த சமந்தாவும் இந்தியிலும் நடிப்பார்கள் என்று அவர் கூறியுள்ளார்.