Sunday, June 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சின்னத்திரையில் என்னை அறிமுகப்படுத்தியவர் பாலசந்தர்தான் – அனுராதா கிருஷ்ணமூர்த்தி

 

அழகான தோற்றம், அமைதியான நடிப்பு என சின்னத்திரை ரசிகர் களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியி ருப்பவர் கர்நாடக சங்கீதப் பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி. நடிப்பு இவருக்கு இடை யில் வந்ததுதான், சில தொடர்களில் மட்டு மே நடித்திருக்கிறார் என்றாலும் தனக் கென்று ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டிருக் கிறார். இசையோடு நெடுந்தொடரில் கவன ம் செலுத்தும் அவரின் சின்னத்திரை பயண த்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

ஜெயா டிவியில் “சஹானா’ என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் என்னை அறிமுகப் படுத்தியவர் பாலசந்தர் சார்தான். “சிந்து பைரவி’ படத்தின் இரண்டாம் பகுதிதான் அந்தத் தொடர். சுஹாசினி செய்த அந்தக் கதாபாத்திரத்தை நான் செய்தேன். அந்தக் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று என்னை நடிக்க வைத்தார் பால சந்தர். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.

அரசி தொடரில் ராதிகாவுடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது . அந்தத் தொடரில் என்னை கொடுமைப்படுத்து வதுபோல் வரும் காட்சிகளை யெல்லாம் என் மாமியார், என் நண்பர்கள் எல் லாம் பார்த்துவிட்டு இந்த மாதிரி கேரக் டர் எல்லாம் செய்ய வேண்டாம் என்று சொல்வார்கள்.

மேடை கச்சேரிகள் மக்களின் பார்வை யில் நேரடியாக செய்கிறோம். ஆனால் திரையில் அப்படி யில்லை. நம்ம மனதி ற்குள் ஒரு கேரக் டரை சித்திரிச்சு அதை நடித்து மக்களிடம் டிவியின் மூலமா கொண்டு செல்கிறோம். இரண்டுமே சுலபம் இல்லை. இரண்டிலுமே கஷ்டங்கள் இருக்கின்றன. இரண்டிலுமே முழுமையான கவனம் செலு த்த வேண்டியிருக்கிறது.

என் கணவர், புகுந்த வீட்டு நபர்களும், பிறந்த வீட்டு நபர்களும் என க்கு ரொம்ப துணையாக இருக்கிறார்கள். அதேபோல் சினிமாத்துறையி ல் இருந்து நிறையபேர் உறுதுணையாக இருக் கிறார்கள். எனக்கு கச்சேரிகள் வரும் நாட்களி ல் டேட்களை மாற்றி கொடுத்து நிறைய ஒத்து ழைப்பு தருகிறார்கள்.இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி சொல்லி க் கொள்ள வேண்டும்.

பாக்யராஜ் சாரோட “விளக்குவெச்ச நேரத்துல’, பாலிமர் சேனலில் “மூன்று முகம்’ தொடரில் நடித்துள்ளேன். தற்போ து சன் டிவியில் தியாகம் தொடரில் நடித்துக்கொ ண்டிருக்கிறேன். “சஹானா’ சிந்து, “திருப்பாவை’ ரங்கநாயகி, “விளக்குவெச்ச நேரத்துல’ ஞானாம் பிகாவாக, எல்லாமே நான் ரொம்ப விரும்பி நடித் தவைதான். அதில் ரொம்ப பிடித்தது “சஹானா’ தொடர். ஏன் என்றால் அதுதான் நான் முதன் முத லில் நடித்த தொடர். நடிப்பே தெரியாமல் செய்தது அந்த கேரக்டர். அதே மாதிரி எனக்கு அமைந்த கதாபாத்திரங்களின் பெயர்களும் கடவுள் கிருபை யால் கிடைத்தது என்று நினைக்கிறேன்.

{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே  பகிர்கிறோம் } } }

-.-
விதை2விருட்சம் இணையத்தில் விளம்பரம் செய்ய விரும்புவோர் vidhai2virutcham@gmail.com  என்ற மின்ன‍ஞ்சலில் தொடர்பு கொள்ள‍வும்.

உங்களுக்கு மேற்காணும் இடுகை பிடித்திருந்தால் கீழ்க்காணும் பொத்தான்களை சொடுக்கி உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள‍லாம்.

 

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: